விஜய்யை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப்போகும் பிரபல நடிகர்! யாரு தெரியுமா?
Power Star Srinivasan vs TVK Vijay: 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

Power Star Srinivasan vs TVK Vijay: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவரது தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. திமுக, பா.ஜ.க. தங்களது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விஜய் பையன் என் ரசிகர்:
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக உலா வருபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு போட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "ஜோசப் விஜய்யை நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்களை எனது கூடப்பிறந்த தம்பி போல நினைக்கிறேன். ஒன்பதுல குரு ஆடியோ லாஞ்ச்ல உங்களைச் சந்தித்தேன். ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து பேசுனோம்.
அப்போது, நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். உலகம் முழுக்க என்னுடைய ரசிகர்கள் உள்ளனர். ஆனால், எனது மகன் உங்கள் ரசிகர். ரொம்ப அமைதியா இருந்தவர் இன்னைக்கு மேடையில பயங்கரமா டயலாக் பேசுறாரு. களத்துக்கு வாங்க. மேடையிலே அவரு வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் எல்லாம் பேசுறாரு.
விஜய்யை எதிர்த்து போட்டி:
கூட்டம் எனக்கு கூடத்தான் கூடுது. கூட்டத்தை வச்சு ஏதும் கணிக்க முடியாது. எனக்கும் ரசிகர்கள் ஏகப்பட்ட பேரு இருந்தாங்க. நானும் கட்சி ஆரம்பிக்க தீவிரமா முயற்சி எடுத்தேன். கடைசியில என்ன சூழ்நிலையோ தள்ளிடுச்சு. என்னுடைய அருமைத் தம்பி 2026 சட்டமன்ற தேர்தல்ல எங்க நின்னாலும் அவரை எதிர்த்து நிற்க நான் தயார். அவரு தயாரானு கேட்டு சொல்லுங்க?
கட்சி எல்லாம் ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சி கூப்பிட்டா கண்டிப்பா போய் நிப்பேன். இல்லாட்டி சுயேட்சையா நிப்பேன். எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது. நாளைக்கு கூட்டணி வாங்கனா ஓடி போகப்போறாரு. அவரு மக்களுக்கு என்ன செய்யப் போறாரு? என்ன கொள்கை இது எல்லாம் சொல்லாமா? அதை அழிச்சுடுவேன்னு சொல்றது ரொம்ப தப்பு.
எனக்கும் ரசிகர்கள் உண்டு:
அவங்க எல்லாம் 50 வருஷ சர்வீஸ். அவருடைய அனுபவம் இவருடைய வயசு. தமிழக முதல்வரை நான் ரொம்ப நேசிக்கிறேன். அவரை இப்படி பேசுறப்ப நான் ரொம்ப வேதனைப்பட்டேன். என்ன இப்படி பேசுறாரேனு? நடிகர்களுக்கும், மற்ற கலைஞர்களுக்கும் அவரு முதல்ல உதவி செய்யட்டும். என் ரசிகர்கள் எனக்கு ஆதரவு தர்றாங்க. இவருக்கு மேல எனக்கு ரசிகர்கள் இருந்தாங்க. நானும் கட்சி ஆரம்பிச்சு எம்பி-க்கு நின்னேன்.
அவங்க அப்பா தயாரிப்பாளர் சங்கத் தலைவரா நின்னாரு, எதிர்த்து போட்டியிட்டேன். இப்போ அவரு பையனை எதிர்த்து போட்டியிடுவேன். எந்த கட்சி கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் நான் சுயேட்சையா எதிர்த்து நிப்பேன்."
இவ்வாறு அவர் பேசினார்.
பவர்ஸ்டார் சீனிவாசன் உனக்காக ஒரு கவிதை என்ற படம் மூலமாக அறிமுகமானார். பின்னர், கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலமாக தமிழ்நாட்டில் பிரபலமானார். ஐ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். ஏராளமான படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர் ஆவார்.