மேலும் அறிய
Pongal 2024 Movie Release LIVE: 4 பொங்கல் படங்கள் இன்று ரிலீஸ்.. வெற்றி யாருக்கு? - அப்டேட்டுகள் உடனுக்குடன்..!
Pongal 2024 Movie Release LIVE Updates: 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் படங்களின் அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Key Events

பொங்கல் படங்கள் 2024
Background
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திரையுலகில் வெளியாகவுள்ள புதிய படங்கள் பற்றி காணலாம்.
- தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம் நடிகர் தனுஷை வைத்து 4வது முறையாக தயாரித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. வரலாற்று கதையில் வெளியான ட்ரெய்லரை பார்க்கும் போது கேப்டன் மில்லர் இந்த முறை நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கிட்டதட்ட நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது தரமான தமிழ் ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல் ஏற்படுவதாக பலரும் தெரிவித்துள்ளனர். ஆக இந்த பொங்கல் அயலான் பொங்கல் தானா என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிந்து விடும்.
- ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1’.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்தை அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் சஞ்சய் கபூர், வினய் பகத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- தெலுங்கில் பிரபல இயக்குநராக உள்ள த்ரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் அடுத்ததாக, அந்த திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து எடுத்துள்ள படம் ‘குண்டூர் காரம்’. இந்த படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.
12:47 PM (IST) • 12 Jan 2024
Pongal 2024 Movie Release LIVE: கேப்டமன் மில்லர் படத்தின் விமர்சனம்!
கேப்டன் மில்லர் விமர்சனம் : "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
12:39 PM (IST) • 12 Jan 2024
Merry Christmas Review: “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!
"தூக்கம் தொலைத்த ஓர் இரவின் கதை ” - விஜய் சேதுபதியின் “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!
Load More
Tags :
Vijay Sethupathi Dhanush Pongal Merry Christmas Ayalaan Sivakarthikeyan Pongal 2024 Captain Miller Pongal 2024 Movies Captain Miller Review Ayalaan Reviewஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















