(Source: ECI/ABP News/ABP Majha)
vinayakan: சகபயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக புகார்...தொடர் சர்ச்சையில் சிக்கும் நடிகர் விநாயகன்
சகபயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாளத் திரைப்பட நடிகர் விநாயகன் மீது கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விமானத்திற்காக காத்திருந்த சகபயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகர் விநாயகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகன்
தமிழில் திமிரு படத்தில் வில்லியாக வரும் ஈஸ்வரியின் அடியாளாக நடித்திருந்தவர் விநாயகன். மலையாளத்தில் பிரபலமான நடிகராக அறியப்படுகிறார். கம்மடிப்பாடம், படா ஆகிய முக்கியமானத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது சக பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக விநாயகன் மீது கேரள உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
தகாத முறையில் நடந்துகொண்டதாக புகார்
அவர் அளித்த புகாரில் “கடந்த மே 27 ஆம் தேதி இண்டிகோ விமானத்திற்காக கோவா விமான நிலையத்தில் காத்திருந்தேன். எனது செல்ஃபோனில் நான் வீடியோ ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் நடிகர் விநாயகன் என்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தார். மேலும் நான் அவரை வீடியோ எடுத்ததாக என்மீது குற்றம்சாட்டி என்னிடம் முறைகேடாக நடந்துகொண்டார். நான் அவரை வீடியோ எடுக்கவில்லை என்றும் வேண்டுமானால் என்னுடைய செல்ஃபோனை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தப் பெண்ணின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல்
இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண். ஆனால் முறையான பதில் ஏதும் இண்டிகோ நிறுவனம் சார்பில் இருந்து வரவில்லை. இதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் புகாரளித்துள்ளார் அவர். விமானத்திற்கு வெளியே நிகழும் நிகழ்வுகளில் தாங்கள் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது அமைச்சகம். பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளான அந்தப் பெண் தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் மனு சமர்பித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கும் கால அவகாசத்திற்குள் இண்டிகோ நிறுவனம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
விநாயகன்
நடிகர் விநாயகன் மீது புகார் அளிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் தகாத முறையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் விநாயகன். மேலும் மீடூ பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது அதுகுறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார் விநாயகன். “ நான் இதுவரை பத்துப் பெண்களுடன் உடலுறவுக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவர்களைப் பிடித்திருந்தது நான் அவர்களின் சம்மதத்தைப் கேட்டேன். எனக்கு ஒருவரை பிடித்திருந்தது என்றால் அவருடன் நான் உடலுறவு கொள்ள விரும்பினால் நான் அவரிடம் நேரடியாக சென்று கேட்பதில் என்னத் தவறு இருக்கிறது. இதை நீங்கள் மீடூ என்று சொன்னால். நான் அப்படி தொடர்ந்து செய்வேன்.” என அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.