Actor Ajith: நடராஜன் பிறந்தநாள் நிகழ்வில் நடிகர் அஜித்... கேக் ஊட்டிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!
நடிகர் அஜித், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#AjithKumar with Cricketer #Natrajan 🤍🤍#AK & Natrajan together celebrated, Natrajan's Birthday last Night🎉✨ pic.twitter.com/15Q5yTVWH3
— AmuthaBharathi (@CinemaWithAB) April 4, 2024
இன்று நடராஜன் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து, நேற்று இரவு 12 மணியளவில் இவருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் அஜித் கலந்துகொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி.நடராஜன் பிறந்தநாள் இன்று..
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாளில் தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சமீபத்தில் கொண்டாடினார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடராஜன் தனது பிறந்தநாளை அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்களுடன் ஹைதராபாத்தில் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள் இன்று டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
#AK and Cricketer #Natarajan 👌 pic.twitter.com/cArsGHpSFj
— Ramesh Bala (@rameshlaus) April 4, 2024
தொழில்துறை கண்காணிப்பாளரும், வர்த்தக ஆய்வாளருமான ரமேஷ் பாலா தனது அதிகாரப்பூர்வ X (முன்னர் ட்விட்டர்) பக்கத்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அஜித்துடன் நடராஜன் இருக்கும் சில கிளிக்குகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படங்களில் அஜீத் குமார் ஒரு வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற டெனிம்ஸ் அணிந்திருப்பதை காணலாம். அதேபோல், நடராஜனும் வெள்ளை டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து காணப்பட்டார்.
நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் காட்சிகள் சில முடிந்து ஓய்வு எடுத்து வரும் அஜித்குமார், சமீபத்தில் மத்திய பிரதேசத்திற்கு தனது பைக்கில் பயணம் செய்து திரும்பினார். இந்த பயணத்தில் அவரது ‘விடாமுயற்சி’ படத்தில் உடன் நடித்த ஆரவ் மற்றும் அவரது நண்பர்களும் சென்றிந்தனர்.
மீண்டும் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்திற்கான அடுத்த சில படப்பிடிப்புகளில் நடிக்க செல்ல இருக்கிறார் அஜித். விடாமுயற்சி படத்தின் முக்கிய காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த ஆண்டின் இறுதியில் படம் பிரமாண்டமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'விடா முயற்சி' படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் அஜித்குமார். இப்படம் 2025 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில், 'குட் பேட் அக்லி' படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.