Pathaan BO Collections, Day 5: பதான் ஐந்தாம் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?: விமர்சகர்கள் சொல்வது என்ன?
ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் கடந்த 2 ஆண்டுகளாக இறங்குமுகத்தில் பயணித்த நிலையில், பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானால் தான் பாலிவுட் மீண்டெழும் என பலரும் ஆரூடம் தெரிவித்து வந்தனர்.
இந்தியில் ஷாருக்கான நடிப்பில் அண்மையில் வெளிவந்த பதான் திரைப்படம் ஐந்தாம் நாள் தொடக்கத்தில் ₹ 60 கோடி முதல் ₹ 62 கோடி வரை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கணித்திருந்தனர். மேலும் இறுதித் தொகை இந்த கணிப்புக்கு சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் எனவும் அவர்கள் கூறியிருந்தனர். அதாவது, ஐந்து நாட்களில் நான்காவது முறையாக அரை சதம் அடிக்க இந்த அதிரடி படம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அபாரமாக ஓடிக்கொண்டிருக்கும் பட்சத்தில், முதல் வார இறுதியில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் ஹிந்திப் படம் என்ற பெருமையைப் பெற உள்ளது.
இதற்கிடையில், பதானின் உலகளாவிய வசூல் இதற்கு முன் ரூ.429 கோடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வசூலை வைத்து இப்படம் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதா என்பதை அறிவிப்பு வரை காத்திருப்போம்.
#Pathaan *early estimates* Sun [Day 5]: ₹ 60 cr to ₹ 62 cr. #Hindi version. 🔥🔥🔥
— taran adarsh (@taran_adarsh) January 29, 2023
Note: Final total could be marginally higher/lower.
பாலிவுட்டில் பலகட்ட பிரச்னைகளைத் தாண்டி ஜனவரி 25ஆம் தேதி வெளியான ஷாருக்கின் பதான் படம் இந்திய சினிமா வரலாற்றில் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கி சாதனை புரிந்து வருகிறது.
ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் கடந்த 2 ஆண்டுகளாக இறங்குமுகத்தில் பயணித்த நிலையில், பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானால் தான் பாலிவுட் மீண்டெழும் என பலரும் ஆரூடம் தெரிவித்து வந்தனர்.
2018ஆம் ஆண்டு வெளியான ’ஜீரோ’ படத்தின் வணிக ரீதியான தோல்வி ஏற்படுத்திய பாதிப்பில், இருந்த ஷாருக்கான் சிறிது காலம் இடைவெளி எடுத்து படங்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வந்தார்.
இதனிடையே 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கத்தில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகர் ஷாருக்கானை பெரும் மன உளைச்சலில் இச்சம்பவம் தள்ளிய நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் திரண்டன.
தொடர்ந்து மும்பை சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான், 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் ஆர்யன் கானை கைது செய்த அலுவலர் சமீர் வான்கடே தான் தற்போது என்.சி.பியில் இல்லை என்றும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கருத்து கூற மறுத்துவிட்டார்.
இந்நிலையில், லால் சிங் சத்தா, பிரம்மாஸ்திரா படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றியதுடன், பதான் படத்தைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் ஷாருக்.
ஆனால் வழக்கம்போல் பாய்காட் பாலிவுட் பிரச்சினைகள் தலைத்தூக்கிய நிலையில், இப்படத்தின் பாடலில் தீபிகாவின் காவி நிற உடை எதிர்ப்புக்களை சம்பாதித்து இந்து அமைப்புகளின் கடும் கோபத்துக்கு ஆளாகி புயலைக் கிளப்பியது.
இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஜன.25 வெளியான பதான் படம் ஷாருக்கானுக்கு சிறப்பான கம் பேக் படமாக அமைந்து மூன்றே நாள்களில் உலகம் முழுவதும் 313 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாள்களில் இதுவரை அதிகம் வசூலித்த இந்தி படம் என்னும் சாதனையையும் புரிந்து கேஜிஎஃப் பட ரெக்கார்டையும் முறியடித்துள்ளது