பாபநாசம் நடிகையா இது? இன்ஸ்டாவில் வைரலான எஸ்தரின் போட்டோ!
பாபநாசம் படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்தவர் எஸ்தர் அனில். இவர்அவ்வப்போது அவர் பதிவிடும் போட்டோக்கள் சோஷியல் மீடியா வைரலாவது வழக்கம்.
![பாபநாசம் நடிகையா இது? இன்ஸ்டாவில் வைரலான எஸ்தரின் போட்டோ! Papanasam actress Anil Esther's hot insta picture goes viral பாபநாசம் நடிகையா இது? இன்ஸ்டாவில் வைரலான எஸ்தரின் போட்டோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/13/b66fe80d87f94ad2c49bc71122f657541660406619877175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாபநாசம் படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்தவர் எஸ்தர் அனில். இவர்அவ்வப்போது அவர் பதிவிடும் போட்டோக்கள் சோஷியல் மீடியா வைரலாவது வழக்கம். அப்படியாக அண்மையில் எஸ்தர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் படு க்ளாமராக இருக்கிறார்.
க்ளாமர் போட்டோ..
அந்தப் புகைப்படத்தில் அவர் ப்ளவுஸ் மட்டும் அணிந்து கையில் பூச்சரத்துடன் நிற்கிறார். தன் கை கறுத்து காணப்படுவதற்கு லடாக்கில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதே காரணம் என்று கூறியுள்ளார். பனியில் கை கறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிங்க் நிற ஜாக்கெட்டில் அவர் மெழுகுச் சிலை போல் நிற்க அந்த புகைப்படத்தின் கீழ் பலரும் மேலாடை எங்கேம்மா என்று கிண்டலாக கேட்டுள்ளனர். அட பாபநாசம் பாப்பாவா இது என்று சிலர் வியந்தும் பதிவிட்டுள்ளனர்.
க்ளாமர் ஃபோட்டோஷூட் எஸ்தருக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல முறை இதுபோல் க்ளாமராக போஸ் கொடுத்து இஸ்டாகிராமில் ஃபோட்டோக்களைப் பகிர்ந்து சூடேற்றியிருக்கிறார்.
View this post on Instagram
குழந்தை முதல் குமரி வரை:
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்தர் அனில். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து தமிழ் மக்களின் மனதைக் கொள்ளையடித்தவர். இதற்கு முன்பு மலையாளத்தில் மோகன் லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 20 வயதை கடந்துவிட்ட எஸ்தர், ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போட்டோஷூட்களை அவ்வப்போது நடத்தி இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அவருக்கென இன்ஸ்டாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது ஒரு சில மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் எஸ்தர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)