Pandian Stores Serial: சீரியலில் ரீஎண்ட்ரி தரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘லக்ஷ்மி அம்மாள்’.!
நடிகர் விக்ராந்தின் தாயாரும், நடிகர் விஜய்யின் சித்தியுமான ஷீலாதான் இந்த லக்ஷ்மி அம்மாள் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளியான ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் கிட்டத்தட்ட தழுவல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். சின்னத்திரையில் தற்போது சூப்பர்ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்த ‘லக்ஷ்மி அம்மாள்’ என்ற கதாப்பத்திரத்தை சீரியல் குழுவினர் சமீபத்தில் நீக்கினர். அந்த கதாப்பாத்திரம் இறந்துவிட்டதாக காட்டிய சீரியல் குழு, அதோடு முடித்துவிட்டது.
நடிகர் விக்ராந்தின் தாயாரும், நடிகர் விஜய்யின் சித்தியுமான ஷீலாதான் இந்த லக்ஷ்மி அம்மாள் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், அந்த கதாப்பாத்திரம் திடீரென்று நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
#PandianStores இல்..! pic.twitter.com/O2iylc7Q6q
— Vijay Television (@vijaytelevision) September 23, 2021
மேலும் படிக்க: 7 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்குமாம்.. எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்!
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விக்ராந்தை அழைத்ததாகவும், ஆனால் அவர் பிக் பாஸ் வாய்ப்பை வேண்டாம் என சொல்லிவிட்டு சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த காரணத்தால்தான் அவரது தாயார் ஷீலா நடித்து வந்த ’லக்ஷ்மி அம்மாள்’ கதாப்பாத்திரத்தை தூக்கினார்கள் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஷீலாவை மீண்டும் விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க அழைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைப் போல ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலான ‘பாக்கியலட்சுமி’ சீரியலில், ராதிகா என்ற கதாப்பாத்திரத்தின் தாயாக அவர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருந்த மாட்ட ல! 😡
— Vijay Television (@vijaytelevision) November 5, 2021
பாக்கியலட்சுமி - நாளை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/S7Diq2amcd
அதனை தொடர்ந்து, நவம்பர் 5-ம் தேதி வெளியான பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடில், ராதிகாவின் தாயாராக நடிகை ஷீலா அறிமுகமாகி இருக்கிறார். இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் லக்ஷ்மி அம்மாவை பாக்கியலட்சுமியில் காணலாம்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்