Suresh Sangaiah: ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குநரின் அடுத்த படம்... சத்திய சோதனை ரிலீஸ் டேட் வந்தாச்சு..
காவல் துறையை மையப்படுத்தி நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தை எடுத்த இயக்குநர் சுரேஷ் சங்கைய்யாவின் அடுத்த படமான சத்திய சோதனை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு விதார்த், ரவீனா ரவி நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் நல்ல வரவேற்பையும் பெற்ற படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. இந்தப் படம் தான் சுரேஷ் சங்கையாவின் முதல் படம்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சுரேஷ் சங்கையா தன் அடுத்த படத்தை இயக்கியுள்ளார். சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள இப்படத்தில் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா, நடிகரும் பேராசிரியருமான கு.ஞானசம்பந்தம் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காவல் துறையை மையப்படுத்தி நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வரும் ஜூலை 21ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா மகிழ்ச்சியுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தை தொடர்ந்து மிக நீண்ட இடைவெளிக்கு பின் எனது அடுத்த படமான சத்திய சோதனை வெளியீடு தேதி அறிவிப்பை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படமும் தங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்.
— suresh sangaiah (@sureshsangaiah) June 26, 2023
நன்றி
சுரேஷ் சங்கையா
முன்னதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் தன் 38 வயதில் உடல்நலக்குறைவால் காலமானது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருந்த நிலையில், சத்திய சோதனை படத்தின் மூலம் மீண்டும் சுரேஷ் சங்கையா உடன் ரகுராம் கைக்கோர்த்திருந்தார்.
ஆனால் தன் சிறு வயது முதலே ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis எனும் அரியவகை நோயால் ரகுராம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இயற்பியலாளரும் மறைந்த விஞ்ஞானியுமான ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் இந்த நோயால் தான் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்.21ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ரகுராம் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது இவர் இசையமைத்துள்ள சத்திய சோதனை வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க: Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!