Rajinikanth : ” ரொம்ப சந்தோஷமான ரெண்டு விஷயம்” : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..
இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான "HOOTE APP"-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தனது மகள் செளந்தர்யா உருவாக்கியுள்ள 'Hoote' செயலியை நடிகர் ரஜினிகாந்த் நாளை தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது. இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன். அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய "HOOTE" என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் "HOOTE APP" மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான "HOOTE APP"-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
🙏🏻🇮🇳 pic.twitter.com/vkTf6mxYUu
— Rajinikanth (@rajinikanth) October 24, 2021
முன்னதாக, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது” என்று கூறினார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளை அவர் முடித்துவிட்டார். இறுதிகட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் இருந்து ஏற்கெனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில், நான்காவது பாடலாக ‘வா சாமி’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
Saravedi Satham therika therika 🔥#VaaSaamy is releasing Today @ 6PM
— Sun Pictures (@sunpictures) October 24, 2021
#Annaatthe4thSingle @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #MukeshMohamed #NochipattiThirumoorthi #KeezhakaraiSamsutheen #ArunBharathi @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/5ujQBtWSMW
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

