Nov 4 OTT release movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
தமிழில் 4 திரைப்படங்களும், 2 இங்கிலிஷ் திரைப்படங்களும், 1 பெங்காலி திரைப்படமும், 2 ஹிந்தி திரைப்படங்களும், 1 தெலுங்கு திரைப்படமும் வெளியாகின்றன.
இந்த வாரம் ஓடிடி வாரம்…
வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 4 அன்று தமிழ் ஹிந்தி இங்கிலிஷ் என பல்வேறு மொழித் திரைப்படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அந்த திரைப்படங்கள் என்னென்ன அவை எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது என்ற பட்டியலைக் காண்போம்.
தமிழில் 4 திரைப்படங்களும், 2 இங்கிலிஷ் திரைப்படங்களும், 1 பெங்காலி திரைப்படமும், 2 ஹிந்தி திரைப்படங்களும், 1 தெலுங்கு திரைப்படமும் வெளியாகின்றன. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி மற்றும் திரையரங்குகளில் பல கோடி வசூல் செய்த இரண்டு திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.
தமிழ்
முதலில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்.
- பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இந்த திரைப்படம் கோலிவுட்டில் 500 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இதுவரையில் வெளியான திரைப்படங்களில் அதிக அளவிலான வசூலை ஈட்டிய திரைப்படமாகவும் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் நான்கு அன்று அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் இந்தி வெர்ஷன். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் அமேசான் பிரைம்.
- இரவின் நிழல்
நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரவின் நிழல் திரைப்படம் வரும் வெள்ளி அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது.
- பேட்டைக்காளி
100 சதவீதம் தமிழ் என்கிற ஸ்லோகனுடன் சமீபத்தில் களமிறங்கிய ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம், பெருமையோடு வெளியிட்டிருக்கும் வெப்சீரிஸ் தான் ‛பேட்டைக்காளி’. வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‛பேட்டைக்காளி’.இந்த சீரிஸின் முதல் எபிசோட் அக்டோபர் 22 ஆம் தேதியும் இரண்டாவது எபிசோட் அக்டோபர் 29 ஆம் தேதியும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்டைக்காளியின் மூன்றாவது எபிசோட் நவம்பர் 4 வெளியாக உள்ளது.
- கையும் களவும்
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் வெப் சீரிஸ் கையும் களவும்.கையும் களவும் வெப் சீரிஸ் நவம்பர் 4 சோனி லைவில் வெளியாக உள்ளது.
ஹிந்தி
அயன் முகர்ஜி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது "பிரம்மாஸ்திரா" திரைப்படம். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் “பிரம்மாஸ்திரா” திரைப்படத்தில் நடித்திருந்தனர்.பான் இந்திய திரைப்படமாக உலக அளவில் வெளியான இப்படம் 430 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான பாலிவூட் திரைப்படங்களில் அதிக அளவில் வசூலை ஈட்டியதில் முதல் இடத்தில் உள்ளது "பிரம்மாஸ்திரா".
நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நானா படேகர், அலி பசல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரொமான்டிக் காமடி திரைப்படம் தட்கா.
வரும் வெள்ளி அன்று பிரம்மாஸ்திரா திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், தட்கா திரைப்படம் ஜீ ஃபைவிலும் வெளியாக உள்ளது.
இங்கிலிஷ் & பெங்காலி
யமோலாஹோல்ம்ஸ் 2 நெட்ப்ளிக்ஸிலும் சீ ஹௌ தே ரன் ஹாட்ஸ்டாரிலும் வெளியாக உள்ளது. அம்ராபளி என்ற பெங்காலி திரைப்படம் ஜீ ஃபைவிலும் தி கோஸ்ட் என்ற தெலுங்கு திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்களை காண ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.