அசோக் செல்வனின் அடுத்த ஃபீல்குட் படமான 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது!
பிரபல நடிகர் அசோக் செல்வனின் அடுத்த படமான நித்தம் ஒரு வானம், அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியாவுள்ளது.
![அசோக் செல்வனின் அடுத்த ஃபீல்குட் படமான 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது! Nitham Oru Vaanam Movie to be released on 4th November Ashok Selvan Ritu Varma Kalyani Priyadarshan அசோக் செல்வனின் அடுத்த ஃபீல்குட் படமான 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/22/e7cd9ccad49300ff4986178244af97581666426864395501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஃபீல் குட் ஹீரோ-அசோக் செல்வன்:
விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அசோக் செல்வன். 2012 ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் வந்த இவர், கூட்டத்தில் ஒருத்தன், தெகிடி, வேழம் போன்ற நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
காமெடி மற்றும் காதலால் நிரம்பியிருந்த ஓ மை கடவுளே படத்தில் இவர் நடித்ததை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மேலும் கூடி விட்டது. ஃபீல் குட் படங்களாக நடித்து, ரசிகர்கள் மத்தியல் ஃபீல் குட் ஹீரோவாக இடம் பிடித்துவிட்டார். இவர், தற்போது ரா கார்த்திக்கின் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
'நித்தம் ஒரு வானம்'
ரா கார்த்திக்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நித்தம் ஒரு வானம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் திருடியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட ரிது வர்மா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் மட்டுமன்றி, சூரரைப் போற்று புகழ், அபர்ணா பாலமுரளி, ஹிரிதயம் புகழ் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக 'நித்தம் ஒரு வானம்' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தினை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது.
View this post on Instagram
வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இயக்குநர் Ra. கார்த்திக் நம்புகிறார். படம் பார்த்து முடித்து திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் போது நிச்சயம் கதை குறித்து பாசிட்டிவாக உணர்வார்கள். வெவ்வேறு காலக்கட்டம் மற்றும் சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என வித்தியாசமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)