Watch video: வெள்ளை வேட்டி... வெள்ளை சட்டை.. புத்தாண்டில் புத்துணர்ச்சியாய் ரஜினி!! வைரலாகும் வீடியோ..!
தீபாவளி, ரஜினி பிறந்தநாள், புத்தாண்டு அன்று ரஜினியை காண ரசிகர்கள் அடிக்கடி அவரது இல்லத்திற்கு வருவது வழக்கம். அப்போது, ரஜினி சில நேரங்களில் ரசிகர்களை சந்திப்பார், சந்திக்காமலும் இருப்பார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்து தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார்.
2021ஆம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டான 2022 பிறந்திருக்கிறது. இந்த வருடத்தில் நினைத்தது நடக்க வேண்டும், துன்பங்கள் எதுவும் நேராமல் இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர். புத்தாண்டையொட்டி சினிமா நடிகர், நடிகைகள் தங்களின் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புத்தாண்டை தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் திரண்டிருந்த ரசிர்களுக்கு வாழ்த்து கூறினார். வேட்டி, சட்டையுடன் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது, அங்கிருந்த ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபாவளி, ரஜினி பிறந்தநாள், புத்தாண்டு அன்று ரஜினியை காண ரசிகர்கள் அடிக்கடி அவரது இல்லத்திற்கு வருவது வழக்கம். அப்போது, ரஜினி சில நேரங்களில் ரசிகர்களை சந்திப்பார், சந்திக்காமலும் இருப்பார். இந்த நிலையில், அவரை பார்த்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் அங்கிருந்து ரசிகர்கள் சென்றனர்.
#JUSTIN | #Rajinikanth
— ABP Nadu (@abpnadu) January 1, 2022
புத்தாண்டையொட்டி தனது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு குழுமியிருந்த ரசிகர்களுக்கு வெள்ளை உடையில் தோன்றி, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!#NewYear2022 | #Rajinikanth pic.twitter.com/fUGs6rZjAd
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.
அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்