Anamika new serial : சின்னத்திரை ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்... மீண்டும் சன்டிவியில் வருகிறது ஒரு திரில்லர் தொடர்...
சன் டிவியில் பல ஆண்டுகளுக்கு பிறகு திரில்லர் ஜானரில் 'அனாமிகா' என்ற புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சேனல் சன் டிவி. சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் விரும்பும் ஒரு ஜானர், திரில்லர். திரில்லர் படங்கள், திரில்லர் தொடர்கள் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள். அப்படி திரில்லர் ஜானரில் சன் டிவியில் தொடர்கள் ஒளிபரப்பாகி பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக ஒரு திரில்லர் தொடர் ஒளிபரப்பாக உள்ளது என நற்செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. இருப்பினும் ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு வரும் கட்டத்தில் இருப்பதால் அடுத்ததாக அந்த நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் குறித்த விளம்பர புரோமோ வெளியாவது வழக்கமான ஒன்றுதான். அப்படி ரசிகர்களின் ஃபேவரட் தொடராக தற்போது ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு அதை ஏன் முடிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் 'அன்பே வா' சீரியல் முடிந்த பிறகு புது திரில்லர் தொடராக 'அனாமிகா' தொடர் ஒளிபரப்பாக உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. அதன் புரோமோ சில நாட்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னட சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமான அக்ஷதா தேஷ்பாண்டே இந்த சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகிறார். முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் என்று முதல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திரில்லர் தொடருக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

