மேலும் அறிய

Legend Saravanan: "இது லெஜண்ட் சரவணன் இல்ல” .. ஃபோட்டோவை பார்த்து குழம்பும் நெட்டிசன்கள்..

நடிகர் லெஜண்ட் சரவணன் புதிதாக பதிவிட்ட புகைப்படத்தை கண்டு இணையவாசிகள் பலரும் விதவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

நடிகர் லெஜண்ட் சரவணன் புதிதாக பதிவிட்ட புகைப்படத்தை கண்டு இணையவாசிகள் பலரும் விதவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பெரும்பாலும் உரிமையாளர்களின் பெயர்களை தவிர்த்து அவர் எப்படி இருப்பார் என பலருக்கும் தெரியாது. பிரபலங்கள் வைத்து தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை எடுத்து வந்த காலக்கட்டத்தில் அந்த ட்ரெண்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அருள் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரான அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரங்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். 

தோற்றம், வயது,விமர்சனங்கள்  என எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு தோன்றியதை செய்யும் அவரின் முடிவை பலரும் வரவேற்றனர். அதிக உருவகேலிக்கு ஆளான அருள் சரவணன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் திரையுலகைச் சேர்ந்த சிலர் அவரை வெளிப்படையாக விமர்சித்தனர். எதற்கும் அசைவு கொடுக்காமல் லெஜண்ட் சரவணாவின் சினிமா எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியானது.

இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இப்படத்தை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்குபவர்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விவேக், பிரபு, சுமன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் இணைந்தனர். “தி லெஜண்ட்” என பெயரிடப்பட்ட அப்படம் 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகி கடந்தாண்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி படுதோல்வி அடைந்தது. 

ஆனாலும் சற்றும் அசராமல் அருள் சரவணன் தனது அடுத்தப் படத்துக்கு கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் தி லெஜண்ட் படம் வெளியானது. இதனிடையே அருள் சரவணன் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு நியூ லுக்கில் நேற்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார். ஆளே மாறிவிட்டது போல செம ஸ்மார்ட் ஆக அவர் இருக்கிறார்.

இதனைப் பார்க்கும் போது இது லெஜண்ட் சரவணன் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் பார்ப்பதற்கு கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர், சிபிராஜ், அதர்வா என பல நடிகர்களை குறிப்பிட்டு உங்களைப் போல இருக்கிறார் பாருங்கள் என கூறியுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget