மேலும் அறிய

Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை குறிவைத்து முதலமைச்சர் விஜய் சாட்டையை சுழற்றி வரும் நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முதல் ஆளாக ஆஜர் ஆகியுள்ளார் முன்னாள் அமைச்சர் சிவசங்கர். அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி மோசடி செய்த புகாரில் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் சிவசங்கர். 

மக்கள் பணத்தை யாரையும் தொடவும் விடமாட்டோம், தொட்டா விடமாட்டேன், இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விடமாட்டோம் என சட்டப்பேரவையிலேயே எச்சரித்தார் முதலமைச்சர் விஜய். அந்தவகையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை கையில் எடுத்து ஆக்ஷனில் இறங்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். திமுகவினரை டார்கெட் செய்து பழிவாங்கும் நடவடிக்கையாக விஜய் இப்படி செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்தநிலையில் கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 23 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய புகாரில் இளஞ்செழியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என்று தகவல் பரவிய நிலையில், அவரை யாரென்றே தனக்கு தெரியாது என்று மறுப்பு தெரிவித்தார் சிவசங்கர். இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சிவசங்கருக்கு இந்த மோசடியில் பங்கு இருப்பதாகவும் அவருக்கு பணத்திலும் பங்கு கொடுத்திருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இளஞ்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து, இந்த மோசடியில் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற சீனிவாசன் கொடுத்த புகாரில் இந்த கைதும் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். இந்தநிலையில் சென்னை மத்திய குற்றப்ப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் ஆஜராகியுள்ளார். 

தவெக அரசின் குறைகளை வலிமையாக சுட்டிக்காட்டும் நபராக திமுகவின் சிவசங்கர் செயல்பட்டு வரும் நிலையில், அவரை வழக்கு மூலம் அச்சுறுத்தி முடக்குவதற்கு இதுபோன்ற புகார்களை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பயன்படுத்துவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுகவினர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள் பரபரப்பை கிளப்பியுள்ளன.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Embed widget