மேலும் அறிய

வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

இயக்குநர் பாக்யராஜ் இறந்த ஒரு சில நாட்களில் அவரது பெயரில் இணையத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பாக்யராஜின் இறப்பு அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் இணையத்தில் இயக்குநர் பாக்யராஜின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த அறிக்கையை யார் எழுதினார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கடந்த ஜூன் 27 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பாக்யராஜின் இறப்பால் அவரது மகன் சாந்தனு , மனைவி பூர்ணிமா உள்ளிட்ட குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் இருந்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர் சாந்தனு தனது தந்தையின் இறப்பால் மனமுடைந்த நிலையில் காணப்படுகிறார். அதே நேரம் சாந்தனு மீது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பார்த்திபனுக்கு நன்றி சொல்லவில்லை

தனது தந்தை உடலுக்கு அஞ்சல் செலுத்தியதற்கும் அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டதற்காக சாந்தனு முதல்வர் விஜய்க்கு உருக்கமாக நன்றி தெரிவித்திருந்தார். அதே நேரம் பாக்யராஜ் இறந்ததில் இருந்து இறுதி சடங்குகள் முடியும் வரை நடிகர் பார்த்திபன் உடனிருந்தார். முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன சாந்தனு பார்த்திபனுக்கு நன்றி சொல்லாததை குறிப்பிட்டு ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் 

பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கை 

பாக்யராஜ் இறந்ததைத் தொடர்ந்து அவரது எக்ஸ் பக்கத்தில் அவரது பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் " "சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் சந்தோஷப்படுத்திப் பாக்குறதுமத்தவங்களை அன்புடன் உங்கள் K பாக்யராஜ். நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும்,திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன். அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன்.பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்” -பார்த்தீர்களா? இன்னும் .... கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் பார்வையாய்!

வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது. Thanks! நன்றி சொல்வது மனித இயல்பு! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான் நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் இருப்பேன்!" என பாக்யராஜ் எழுதியதைப் போல எழுதப்பட்டுள்ளது.

அப்பா பெயரை பயண்படுத்துகிறாரா சாந்தனு ?

இந்த அறிக்கையை யார் எழுதியது என்பது குறித்த விபரக்கள் பாக்யராஜ் குடும்பத்தினர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையில் "என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன்" என கூறப்பட்டிருப்பதால் சாந்தனு தான் இந்த அறிக்கையை எழுதியிருப்பார் என சிலர் கூறி வருகிறார்கள். தனது தந்தையின் பெயரை பயன்படுத்திக்கொண்டு சாந்தனு திரைப்பட வாய்ப்பை தேடுகிறார் பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்."

Advertisement

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget