மேலும் அறிய

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?

அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

எல் நினோ:

மேலும் முக்கிய வேளாண் பருவங்களை அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதால் இச்சட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும் என்றும், அக்காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்குவதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 'எல் நினோ (El Nino) போன்ற கணிக்க இயலாத காலநிலை மாற்றங்கள், விவசாயக் கால அட்டவணையை அடிக்கடி மாற்றும் தன்மையுடையதாய் உள்ளதால், எதிர்பாராத காலங்களில் தொழிலாளர் தேவையை ஏற்படுத்துவதுடன் முன்பே அறிவிக்கப்பட்ட முதன்மைப் பருவங்களின்போது வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பின் அவசியத்தை ஏற்படுத்தும் என்பதால், கால அட்டவணையை முன்னரே அறிவிப்பதற்குப் பதிலாக, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த 60 நாட்கள் முதன்மைப் பருவத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மாற்றி (Dynamically) அறிவிப்பதற்கான அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்று முதலமைசசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாநில வீட்டுவசதி திட்டங்கள்:

இத்திட்டத்தில், மாநில வீட்டுவசதித் திட்டங்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை நீட்டிப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாக அமைந்துள்ளது என்றும், இச்சட்டம் ஒன்றிய அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க (Convergence) அனுமதிக்கும் அதே வேளையில், மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களை விலக்கி வைப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

அனைவருக்கும் வீடு:

மேலும், பின்தங்கிய கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நோக்கமாகக் கொண்டு, "அனைவருக்கும் வீடு" என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டுவசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவிடுமாறும் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பணிகளை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்கு திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த ஒப்புதல்களைப் பரவலாக்குவது அவசியமானதென்றும், இச்சட்டத்தின்படி, ஒருங்கிணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய, மாநில அல்லது உள்ளூர் திட்டங்களும் ஒன்றிய அரசால் தனித்தனியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் திட்ட ஒருங்கிணைப்பு வாய்ப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் மாறிவரும் நிதி நிலைமை மற்றும் மாநில அரசின் புதிய முன்முயற்சிகளைப் பொறுத்து அமைவதால், இத்தகைய தனித்தனி அறிவிப்புகள் நிர்வாகத் தாமதங்களை உருவாக்கும் என்பதால் ஒன்றிய அரசுக்குத் தகவல் தெரிவித்து, திட்டங்களை ஒருங்கிணைக்கும் அறிவிப்பு மற்றும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்குவது, மிகவும் பயனுள்ளதாகவும் திட்டச் செயலாக்கத்தை உறுதி செய்யவும் ஏதுவாக அமையும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி:

இறுதியாக, மகாத்மா காந்தி மாண்பைப் போற்றும் வகையிலும், இத்திட்டத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை மேலும் உயர்த்தும் வகையிலும் இத்திட்டத்தை மகாத்மா காந்தி  பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்றும், இந்த முக்கிய மாற்றங்களுடன், இத்திட்டத்தை மேலும் சிறப்பாக தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிரக் கவனத்துடனும் செயல்படுத்த முடியும் என்று குறிப்பிட்டு, இந்த முன்மொழிவுகளை இந்தியப் பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்று தான் எதிர்பார்ப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
"டெல்லி போகக் கூடாதா?" - தமிழக விவசாயிகளை வழியிலேயே இறக்கிவிட்ட மராட்டிய போலீஸ்! விஜய் அரசு கண்டிக்கக் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget