Vettaiyan Negative Reviews : வேட்டையன் படத்துக்கு, திட்டம்போட்டு பரப்பப்படும் நெகட்டிவ் விமர்சனங்கள்.. ஹேஷ்டேக் கலாச்சாரம் ஏன்?
Vettaiyan Disaster: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகிறது
வேட்டையன்
த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
திட்டமிட்டு பரப்பப்படும் நெகட்டிவ் விமர்சனங்கள்
வேட்டையன் படத்தின் முதல் காட்சிகள் முடிந்து படத்தின் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் விமர்சகர்களும் இப்படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையே தெரிவித்துள்ளார்கள். ஞானவேல் ராஜாவின் அழுத்தமான கதைசொல்லல் ரஜினியின் மாஸ் என இரண்டையும் கலந்து ஒரு நல்ல கமர்ஷியல் படமாக வேட்டையன் படம் உருவாகியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் வேட்டையன் படத்திற்கு திட்டமிட்டே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள் இன்னொரு தரப்பினர். ரஜினியின் அண்ணாத்தே படத்தின் விமர்சனங்களை வேட்டையன் பட விமர்சனமாக எடிட் செய்து வெளியிடுவது, கூட்டமே இல்லாத திரையரங்க வீடியோக்களை வெளியிடுவது என பல விதங்களில் இந்த படத்திற்கு முதல் நாளிலேயே நெகட்டிவ் ப்ரோமோஷன்கள் தொடங்கியுள்ளன. மேலும் எக்ஸ் பக்கத்தில் Vettaiyan Disaster என்கிற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புபவர்கள் பெரும்பாலும் விஜய் ரசிகர்களாக இருப்பது குறிப்பிடத் தக்கது. வேட்டையன் படத்தின் முதல் நாள் முன்பதிவுகளையும் விஜயின் தி கோட் படத்தோடு ஒப்பிட்டு விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த விதமான ஓப்பீட்டு மனநிலையில் இருந்து பெரிய ஸ்டார்களே விலகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இன்னும் அதே மனநிலையில் இருப்பது வருத்தமளிக்கும் விதமாக உள்ளது.
ALSO READ | Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ