விஜய் சேதுபதி மகள் மீது சைபர் தாக்குதல்...பேட் கெர்ல் டீசரை பகிர்ந்ததால் சர்ச்சை
வெற்றிமாறனின் உதவி இயக்குநர் தயாரித்துள்ள பேட் கெர்ல் படத்தின் டீசர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இந்த டீசரை பகிர்ந்த விஜய் சேதுபதியை நெட்டிசன்கள் தாக்கி வருகிறார்கள்

பேட் கெர்ல்
வெற்றிமாறனின் உதவி இயக்குநராக கடந்த பத்து ஆண்டுகளாக பணியாற்றியவர் வர்ஷா பரத். தற்போது பேட் கர்ல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளார்கள். பேட் கர்ல் படத்தின் டீசர் வெளியாகி பரவலான விவாதத்தை கிளப்பியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய வெற்றிமாறன்
சிறிய வயதில் இருந்தே யாரையாவது காதலிக்க வேண்டும் என்று தீவிர ஆசைக் கொண்ட ஒரு பெண். தனது பெற்றோர்கள் முதல் சுற்றியுள்ளவர்கள் வரை தனக்கு விதிக்கப்படும் கட்டுபாடுகளை எதிர்த்து தனக்கு பிடித்ததை செய்கிறார் நாயகி. கமிங் ஆஃப் ஏஜ் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசரில் நெருக்கமான காதல் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. டீசர் வெளியான நாள் முதல் இந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் மோகன் ஜி வெற்றிமாறன் மற்றும் இப்படத்துடன் சம்பந்தபட்ட அனைவரையும் விமர்சித்து பதிவிட்டிருந்தார். ஒரு பிராமண வீட்டு பெண்ணை இப்படி சித்தரிப்பதற்கு பதிலாக உங்கள் சாதி பெண்களை வைத்து இப்படி படம் எடுங்கள் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
விஜய் சேதுபதி மகளை தாக்கும் நெட்டிசன்கள்
Hope your daughter turns out like this, @VijaySethuOffl https://t.co/X2J8tl7Oj5 pic.twitter.com/rmWwP5Va4S
— BarcaHub (@barcahubHQ) January 27, 2025
படத்தை தயாரித்த வெற்றிமாறனை மட்டுமில்லாமல் படத்தின் டீசரை பகிர்ந்த அனைவரும் நெட்டிசன்கள் தாக்கி வருகிறார். பேட் கெர்ல் டீசரை பகிர்ந்த விஜய் சேதுபதியை உங்கள் மகள் இதே மாதிரி செய்தால் புரியும் என குறிப்பிட்டு இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
உன்னுடைய மகளும் இதே மாதிரி வர எனது வாழ்த்துக்கள் டா மயிராண்டி.
— Vijaykumar Shanmugam kaadaiyon (@vijayshan) January 27, 2025
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 https://t.co/oKUMqj0UUr

