உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவிற்கு வந்தவர் ஸ்ருதி ஹாசன்.
அதன்பின் தன் திறமைகளால் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக்கொண்டார்.
இசையமைப்பாளர், பாடகி, நடிகை என பல துறைகளில் தன் திறமையை காட்டி வருகிறார்.
இருந்தும், இசை துறைக்கு அதிக ஆர்வமும் நேரமும் செலவு செய்கிறார்.
சமூகத்திற்காக குரல் கொடுக்கும் சமூல ஆர்வலராகவும் உள்ளார் ஸ்ருதி ஹாசன்.
’The Phoenix Palmyra’ எனும் கவிதை தொகுப்பின் மூலம் தன் எழுத்து திறமையையும் உலகிற்கு காண்பித்தார்.
இவை மட்டுமல்லாது இன்னும் பல தனித்திறமைகளை கொண்ட ஸ்ருதி ஹாசன், இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.