Theri Song: பிரபல ஆங்கில வெப் சீரிஸில் இடம்பெற்ற விஜய் பாடல்... கொண்டாட்டத்தில் தென்னிந்திய ரசிகர்கள்..!
தனுஷின் ‘ரவுடி பேபி’, விஜயின் ’அரபிக்குத்து, வாத்தி கம்மிங்’, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ’புட்டா பொம்மா, ஏ சாமி’ உள்ளிட்ட பாடல்கள் யூடியூப்பில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் பாடல்களை கொண்டாடுவதில் உலக சினிமா ரசிகர்களை அடித்து கொள்வதில் ஆளே கிடையாது. அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பாடல்களை பிரபலமாக்கி, அதை வெளிநாட்டவர்கள் ரீல்ஸ் செய்து ட்ரெண்ட் செய்வர்.
சமீபத்தில் தனுஷின் ‘ரவுடி பேபி’, விஜயின் ’அரபிக்குத்து, வாத்தி கம்மிங்’, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ’புட்டா பொம்மா, ஏ சாமி’ உள்ளிட்ட பாடல்கள் யூடியூப்பில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்தநிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய்-சமந்தா நடிப்பில் வெளியான 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'என் ஜீவன்...' பாடலானது 'தி ஆபீஸ்' பட புகழ் மின்டி காலிங் இயக்கியுள்ள 'நெவர் ஹேவ் ஐ எவர்' என்ற ஹாலிவுட் வெப் தொடரில் இடம்பெற்றுள்ளது. இந்த வெப் தொடர் பிரபல ஓ.டி.டி. தளத்தில் கடந்த ஜூன் 8 ம் தேதி வெளியாகி உள்ளது.
En Jeevan" Song has in Netflix's American WebSeries "Never Have I Ever" 🤩❤️#Leo @actorvijay @gvprakash @Atlee_dir#Thalapthy68 #ThalapathyBdayMonthFiesta pic.twitter.com/3gLRG4rEqI
— ACTOR VIJAY FAN BOY (@VJ_FAN__BOY) June 10, 2023
முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்துள்ள இந்த தொடர், ’நெவர் ஹேவ் ஐ எவர்' வெப் தொடரின் 4-வது மற்றும் இறுதி பாகமாக வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த கவிஞர் நா. முத்துகுமார் வரிகளில் ’என் ஜீவன்’ பாடலை ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதற்கு மிகப்பெரிய பலமாக ஹரிஹரன், சைந்தவி மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடியிருந்தனர்.
Wow Never have I ever lo pushpa song 🔥🔥 pic.twitter.com/RvvtJyeHY9
— Tom (@Hodophile1322) June 8, 2023
அதேபோல், தெலுங்கில் ஹிட்டான பாடல் ' ஏ சாமி’ பாடலும் இந்த வெவ் சீரிஸில் இடம் பெற்றிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா: தி ரைஸ் வெளியான இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க தேவி ஸ்ரீ பிரசாத், மௌனிகாயாதவ் பாடியிருந்தார். இந்த பாடலும் நெவர் ஹேவ் ஐ எவர் படத்திலும் இடம்பெற்றுள்ளது இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.