Neetu Chandra : ''மாசம் ரூ.25 லட்சம்.. சம்பளத்துக்கு மனைவியா கூப்டுறாங்க'' - மனம் உடைந்து பேசிய நீத்து சந்திரா!
ஒரு வெற்றிப்பெற்ற நடிகரின் தோல்விக்கதையே என்னுடைய கதை என வருத்தத்தை பதிவு செய்துள்ளார் நடிகை நீத்து சந்திரா.
தொழிலதிபர் ஒருவர் தன்னை மாதசம்பளத்துக்காக மனைவியாக இருக்கும்படி அழைத்ததாகவும் அதற்கு அவர் மாதத்துக்கு ரூ.25 லட்சம் தர பேரம் பேசியதாகவும் நடிகை நீத்து சந்திரா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் கவனிக்க வைத்த நடிகை நீத்து சந்திரா. இவர், யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 2005ம் ஆண்டு இந்தி படம் மூலம் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்த நீத்து தொடர்ந்து பல படங்களில்நடித்தார். கவர்ச்சி, நடிப்பு என அனைத்திலும் தன்னுடைய பெஸ்டை கொடுத்தாலும் நீத்துவுக்கு திரைத்துறை சரியாக கைகொடுக்கவில்லை. பட வாய்ப்புகளின்றி தவித்து வரும் நீத்து தற்போது இதுதான் தன்னுடைய நிலை என்பதுபோல் பேசியுள்ளார்.
View this post on Instagram
பாலிவுட் குங்குமா இணையதளத்துக்குப் பேசிய நீத்து சந்திரா, ஒரு வெற்றிப்பெற்ற நடிகரின் தோல்விக்கதையே என்னுடைய கதை. நான் 13 க்கும் அதிகமான தேசிய விருது பெற்ற நடிகர்களுடனும்,பெரிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இன்று எனக்கு வேலை இல்லை. ஒரு தொழிலதிபர் என்னிடம் மாதச்சம்பளத்துக்கு மனைவியாக வருமாறு அழைக்கிறார். மாதத்துக்கு ரூ.25 லட்சம் பணம் தருவதாக கூறுகிறார். நான் கவலையில் இருக்கிறேன். ஒரு ஆடிஷனில் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் என்னை ஒரு மணி நேரத்துக்குள் படத்துக்கு சரிவர மாட்டேன் எனக்கூறி வேண்டாமென்றார். அவர் உண்மையில் என்னை ஆடிஷன் செய்தாரா தெரியவில்லை.அல்லது என்னுடைய நம்பிக்கையை உடைக்கிறாரா என புரியவில்லை.
View this post on Instagram
முன்னதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு பேசிய நீத்து, ''எல்லாம் மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது' எனக் குறிப்பிட்டு பேசி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.