மேலும் அறிய

Haddi Trailer : பயங்கரமான பழிவாங்கல் ஸ்டோரி...திருநங்கை கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக்.. ஹட்டி ட்ரெயிலர் ரிலீஸ்

நவாசுதீன் சித்திக், அனுராக் காஷ்யப் நடித்திருக்கும் ஹட்டி திரைப்படத்தின் ட்ரெயலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

 நவாசுதீன் சித்திக் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று  நடித்துள்ள ’ஹட்டி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 நவாசுதீன் சித்திக்

கேங்ஸ் ஆஃப் வாஸெப்பூர் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார். தொடர்ச்சியாக மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நவாசுதீன் சித்திக் தற்போது நடித்துள்ள படம் ஹட்டி (எலும்பு) . இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். அக்‌ஷத் அஜய் ஷர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஜீ ஃபைவ் ஒடிடி தளம் தயாரித்து வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடுகிறது.  இந்நிலையில் ஹட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில்  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஹட்டி ட்ரெய்லர்

”எங்களைப் பார்த்து மக்கள் ஏன் பயப்படுகிறார்கள் தெரியுமா? எங்களது ஆசீர்வாதம் ரொம்ப சக்தி வாய்ந்தது அதே நேரத்தில் எங்களது சாபம் ரொம்பவும் பயங்கரமானது. ஆனால் இதைவிட பயங்கரமானது எது தெரியுமா  நாங்கள் பழி தீர்ப்பது“ என்று  திருநங்கையாக தோன்றும் நவாசுதீன் சித்திக் பேசும் வசனத்தில் இருந்து தொடங்குகிறது ஹட்டி படத்தின் ட்ரெய்லர். தனது சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வில்லனால் (அனுராக் கஷ்யப்) ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்படுவதால் பழிதீர்க்க ஆணாக வேடமிட்டு தனது எதிரிகளை கூண்டோடு அழிக்கிறார் ஹட்டி என்கிற நவாசுதீன் சித்திக்.

திருநர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு ரிவெஞ்சு ஸ்டோரியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாற்றுப்பாலினத்தவர்களை தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக சித்தரித்து வந்த படங்களுக்கு மத்தியில் ஒரு புதிய முயற்சியாக கெத்தான ஒரு பழி தீர்க்கும் த்ரில்லராக இந்த படம் உருவாகி இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Embed widget