National Awards 2025: பார்க்கிங் முதல் ஜி.வி பிரகாஷ் வரை.. தேசிய விருதுகள் 2023! மீண்டும் சாதித்த தமிழ்ப்படங்கள்
National Awards 2025 தமிழ் திரைப்படமான ‘பார்க்கிங்’, சிறந்த திரைப்படமாகவும், சிறந்த திரைக்கதைக்காகவும் தேசிய விருதுகளை வென்றுள்ளது.

டெல்லியில் 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படமான பார்க்கிங் இரண்டு தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
தேசிய விருதுகள் 2023:
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைப்படங்களையும், நடிகர், நடிகை, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் பாராட்டும் வகையில் மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது.
தேசிய விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன:
-
சிறப்புப் படம் (Feature Film)
-
சிறப்பு அல்லாத படம் (Non-feature Film)
-
திரைப்பட எழுத்து (Film Writing)
‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு மூன்று தேசிய விருதுகள்
தமிழ் திரைப்படமான ‘பார்க்கிங்’, சிறந்த திரைப்படமாகவும், சிறந்த திரைக்கதைக்காகவும் தேசிய விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் நடித்த எம். எஸ். பாஸ்கர், சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்தனர்,
எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றார்#NationalFilmAwards #MSBhaskar #Parking #tamilcinema #ABPNadu pic.twitter.com/FSpxwCKcAT
— ABP Nadu (@abpnadu) August 1, 2025
எம்,எஸ் பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது.
🏆71st #NationalFilmAwards 🏆
— PIB India (@PIB_India) August 1, 2025
➡️Best Music Direction goes to
🎵Music Director (Songs): Vaathi (Tamil)
🎼Music Director (Background Music): Animal (Hindi)@MIB_India @DDNewslive @airnewsalerts pic.twitter.com/vkHffNhudI
சிறந்த இசையமைப்பாளர்:
தமிழ் திரைப்படமான ‘வாத்தி’ இசையமைத்த ஜிவி பிரகாஷ், இந்தாண்டின் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ஹீரோ நடித்திருந்தார்.
ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருது
அட்லீ இயக்கிய ஹிந்தி திரைப்படமான ‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான், சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். தனது 35 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில் நடிகர் ஷாருக்கான் வென்ற முதல் தேசிய இதுவாகும்.
'ஜவான்' படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் ஷாருக் கானுக்கு தேசிய விருது#NationalFilmAwards #jawan #sharukhkhan #Atlee #ABPNadu pic.twitter.com/E21DF8JnzM
— ABP Nadu (@abpnadu) August 1, 2025
அதேப்போல் சிறந்த தெலுங்குப்படமாக பாலையா நடிப்பில் உருவான பகவந்த் கேசரி திரைப்படம் வென்றுள்ளது,





















