Nagarjuna: நரம்பு புடைக்க வெறியேற்றிய ரட்சகன்: ஆனாலும் தமிழை அவாய்ட் செய்த நாகார்ஜூனா - ஏன் தெரியுமா?
ரட்சகன் படத்திற்கு பிறகு ஏன் தமிழில் பெரிதாக நடிக்க வில்லை என்பது குறித்து நடிகர் நாகார்ஜூனா பேசியிருக்கிறார்.
‘ரட்சகன்’ படத்திற்கு பிறகு ஏன் தமிழில் பெரிதாக நடிக்க வில்லை என்பது குறித்து நடிகர் நாகார்ஜூனா பேசியிருக்கிறார்.
இது குறித்து நாகார்ஜூனா பேசும் போது, “ ரட்சகன் படத்திற்கு பிறகு தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நிறைய ஆஃபர்கள் வந்தது. ஆனால் எனக்கு தெலுங்கு சினிமா எனக்கு மிகவும் செளகரியமாக இருந்தது. என்னுடைய குடும்பமும் அங்கு இருந்தது. இந்தியில் கூட அவ்வப்போது சென்று வந்தேன். தமிழில் படம் செய்யவில்லை. காரணம் என்னவென்றால் சிறிது காலத்திற்கு பிறகு யாரும் என்னைத் தேடி வரவில்லை. அவர்கள் வந்திருந்தால் நான் நிச்சயம் தமிழில் படம் செய்திருப்பேன்.” என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram
தெலுங்கு திரையிலகில் இன்றும் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜூனா. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட 'இதயத்தைத் திருடாதே, உதயம்' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழில் நேரடியாக ‘ரட்சகன்’ படத்தில் நடித்தார். இந்தப்படம் தோல்வியை சந்தித்தது.
View this post on Instagram
அதன் பின்னர் பெரிதாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் ‘பயணம்’ ‘தோழா’ படங்களில் நடித்தார். இந்த இருபடங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘த கோஸ்ட்’ திரைப்படம் ‘இரட்சன்’ என்ற பெயரில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. அப்போது பேசிய நாகர்ஜூனா, “ நான் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவன். சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில்தான் படித்தேன். சென்னை சாலைகள் எல்லாம் எனக்கு நன்றாகத்தெரியும்” என்று பேசினார்.