Naane Varuven Update: ‛நானே வருவேன் படம் எப்போ ரிலீஸ்...’ கலைப்புலி அப்டேட்... தனுஷ் ரசிகர்கள் குஷி!
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”.
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியாகியுள்ளது.
View this post on Instagram
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
View this post on Instagram
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட்டுகளோடு புதுப்புது போஸ்டர்களும் வெளிவருவது வழக்கம். இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக செல்வராகவன் தெரிவித்த நிலையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
Coming Soon in Theatres! #NaaneVaruven @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @RVijaimurugan pic.twitter.com/4bs8bw42kk
— Kalaippuli S Thanu (@theVcreations) August 22, 2022
இந்நிலையில் நானே வருவேன் படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என புதிய இரு போஸ்டர்களோடு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் தற்போது நானே வருவேன் படத்தின் அப்டேட்டால் உற்சாகமடைந்துள்ளனர்.