மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Visu : அம்மையப்ப முதலியாரை மறக்க முடியுமா? - வசனங்களுக்கு விலாசம் கொடுத்த விசு பிறந்த தினம் இன்று...

நாடகங்களின் மீது மேன்மையான மரியாதை கொண்ட விசு தனது படங்களை நாடக பாணியில் கொடுத்தது விமர்சனங்களை எழுப்பினாலும் அதையே அவர் பெருமிதமாக கொண்டவர். அது தான் அவரின் தனித்துமான ஸ்பெஷாலிட்டி. 

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் இயக்குநர் சிகரத்தின் கண்டுபிடிப்புகள் நடிகர்களாக மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன அவர்கள் இயக்குநர்களாகவும் இருக்கலாம். அப்படி மோதிர கையால் கொட்டு வாங்கியவர் தான் தமிழ் சினிமாவின் சிறந்த கதை சொல்லியான இயக்குநர் விசு. அந்த மகாகலைஞனின் பிறந்ததினம் இன்று. 

Visu : அம்மையப்ப முதலியாரை மறக்க முடியுமா? - வசனங்களுக்கு விலாசம் கொடுத்த விசு பிறந்த தினம் இன்று...

மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்பது தான் அவரின் இயற்பெயர் என்றாலும் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விசு என்றே அறியப்பட்டார். அந்த பெயரை கேட்டவுடன் நினைவில் வரும் இரண்டு அம்சங்கள் அவரின் கணீர் குரல் மற்றும் அவரின் எளிமையான ஆனால் வலிமையான வசனங்கள் தான். நாடகங்களின் மீது மேன்மையான மரியாதை கொண்ட விசு தனது படங்களை நாடக பாணியில் கொடுத்தது விமர்சனங்களை எழுப்பினாலும் அதையே அவர் பெருமிதமாக கொண்டவர். அது தான் அவரின் தனித்துமான ஸ்பெஷலிட்டி. 

கே. பாலச்சந்தர் படங்களில் ஜொலித்த பல வசனங்களுக்கும் விசு தான் சொந்தக்காரர் என்பது பலரும் அறியாத ஒன்று. குறிப்பாக என்றுமே நினைவில் நிற்கும் தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் - ரஜினியிடையே நடைபெற்ற ஸ்வாரஸ்யமான உரையாடலுக்கு காரண கர்த்தா விசு தான். தனது நாடகபாணியை எந்த இடத்திலும் தவற விடாத விஸ்வாசமான கலைஞர் விசு. தனது படங்களில் குடும்ப சென்டிமென்டை கையில் எடுத்து அதில் வித்தியாசமான வசனங்களால் விளையாடியவர். அவர் சொல்ல வரும் மிகவும்  ஆழமான கருத்துக்களை கூட மிகவும்  எளிமையான வசனங்கள் மூலம் எளிமையாக மக்களிடையே கொண்டு சேர்க்க கூடியவர். அதன் சான்றுகள் தாம் சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, டௌரி கல்யாணம் போன்ற படங்கள். 

Visu : அம்மையப்ப முதலியாரை மறக்க முடியுமா? - வசனங்களுக்கு விலாசம் கொடுத்த விசு பிறந்த தினம் இன்று...

நாடகதன்மை கொண்ட வசனங்கள் என்றாலும் அதில் யதார்த்தத்தை கலந்து வெற்றி கண்ட வித்தகர் என்றால் அது மிகையல்ல. இன்றும் விசுவின் தீவிர ரசிகர்கள் மறக்கமுடியாத காட்சியாக கருதப்படுவது சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இடம் பெற்ற ரகுவரன் - விசு இடையே நடைபெறும் காரசாரமான விவாதம். இந்த படம் பல தசாப்தங்கள் தாண்டி டிவியில் போட்டாலும் 2கே கிட்ஸ் வரை ரசித்து பார்க்கும்  அளவுக்கு இருக்கும். விசுவின் படைப்புகளில் இருக்கும் ட்ரேட்மார்க் என்னவென்றால் அவரின் படங்களில் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் நிச்சயமாக இடம் பெற்று இருப்பார்கள்.

அந்த பட்டியலில் மனோரமா, எஸ்.வி.சேகர், அவரின் சகோதரர் கிஷ்மு, திலீப், டெல்லி கணேஷ், கமலா காமேஷ், கோகிலா, இளவரசி போன்றவர்கள் ஏதாவது ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் அவரின் படங்களை அலங்கரிப்பார்கள். அதே போல அவருக்கு மிகவும் பிடித்த உமா என்ற பெயர் நிச்சயம் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக இருக்கும். இதை எதையும் அவர் யாருக்காகவும் மாற்றிக் கொண்டது  கிடையாது. பட்ஜெட் படங்களுக்கு சிறப்பான தேர்வு விசு தான். மிகவும் உணர்ச்சிகரமான காட்சியாக இருந்தாலும் அதை ஒரே ஷாட்டில் அசால்ட்டாக முடிக்க கூடியவர். நெருக்கடிகளே அவரின் பலத்தை பன்மடங்காக பெருகியது. 

தமிழ் ரசிகர்களை தனது வசனத்தால் கட்டிப்போட்ட விசு உலகளவில் மக்களை தான் பக்கம் கவனம் ஈர்க்க செய்தது விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு வீட்டையும் அலங்கரித்த அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் பல உணர்ச்சிகளை  வெளிக்கொண்டு வந்த மேடை. பல இளைஞர்களின் மனதுக்குள் பூட்டி வைக்கப்பட்டு இருந்த சோகம், கோபம், கனவுகள் அனைத்தின் திறவுகோலாக இருந்தார் விசு. இந்த ஆகசிறந்த கலை சிற்பியின் 78வது பிறந்தநாள் இன்று. திரையுலகில் வசனங்கள் உள்ளவரை விசுவின் பெருமைகளும் படைப்புகளும் நிச்சயமாக பேசப்படும்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget