மேலும் அறிய

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்...பூமர் மாதிரி பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்

கோவையில் கல்லூரி மாணவி மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை ஆளும் கட்சியான திமுகவை நோக்கி பலர் சமூக வலைதளத்தில் எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ஒரு சிலர் பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்தும் விதமாகவும் கருத்தை முன்வைத்து வருகிறார்கள் . அந்த வகையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சைக்குரிய விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

பூமர் மாதிரி பேசும் ஜேம்ஸ் வசந்தன் 

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவாகரத்து குறித்து பதிவிட்ட ஜேம்ஸ் வசந்தன் " 

1. கோவை விமானநிலையத்தின் பின்புறம் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக அந்த இடத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்தபோது அந்தப் பெண் மீதும், அவளது ஆண் நண்பன் மீதும் கோபம் வந்தது. பகலிலேயே ஆள்நடமாட்டமற்ற திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு.

2. முதலில், அந்தப் பெண் தவறு.  இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?  பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்? 

3. இரண்டாவது, அந்தப் பையன் தவறு. அவ்வளவு தனிமையான இடத்துக்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், அவளைக் காப்பாற்றக்கூடிய திராணி இருக்கவேண்டும். நிச்சயமாக அந்த இடத்தை இவன்தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கமுடியும். இப்போது அவள் இழந்ததை அவன் மீட்டுத்தர முடியுமா?

4. அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லாவா இப்போது! இனி அழுது பயனில்லை. 

5. ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள். மனம்நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றோரையும் நேருக்குநேர் பார்க்கமுடியாமல் குனியும் அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது.

6. இதைப்போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவேமுடியாது. மாட்டித்தான் ஆவார்கள். 

7. இதை வாசிக்கிறவரில் இதைப்போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பாய். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்துவிட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனைக்குறித்து கூட நீ சிந்திக்கவேண்டாம். உன் நலனுக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடாதே. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும், உன் வாழ்க்கை உனக்குத் திரும்பக் கிடைக்காது.

8. தவறான நண்பனைத் தவிர்." என அவர் பதிவிட்டுள்ளார். இப்பதிவைத் தொடர்ந்து பலர் ஜேம்ஸ் வசந்தனை பூமர் என விமர்சித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget