‛மூன்று ட்யூனை ஒரு பாடலாக்கினார் எம்.ஜி.ஆர்.,’ இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ப்ளாஷ்பேக்!
Sankar Ganesh: ஸ்ரீதர் சாருக்காக கம்போஸ் பண்ண ஒரு பாடல் மூன்று மாதங்கள் எடுத்து கொண்டன. அந்த பாடல் தான் "நெஞ்சம் மறப்பதில்லை..." பாடல்.
Sankar Ganesh shares memories: ஒரே ஒரு பாடல் ஆனால் நாங்கள் பட்ட பாடு இருக்கே... எம்.ஜி.ஆர் பற்றி சங்கர் கணேஷ் ஒரு ஸ்வாரஸ்யமான தகவல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் -மஞ்சுளா நடிப்பில் வெற்றி நடை போட்ட திரைப்படம் "இதய வீணை'. இப்படத்தின் பாடல் ஒன்றிற்காக சுமார் மூன்று மாதங்கள் வரை டியூன் ஒகே ஆகவில்லையாம். அதற்காக எங்களை பெண்டு நிமித்தினார் எம்.ஜி.ஆர் என்று ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை ஒரு நேர்காணலின் போது பகிர்ந்தார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.
எம்.ஜி.ஆர் செய்த செயல்:
பாட்டிற்கு டியூனை பாடிகாட்டுவதற்காக நங்கள் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றோம். உடனே இன்று ஒகே செய்து விடுவார் எனது மிகவும் சந்தோசஷமாக இருந்தோம். டியூனை பாட ஆரம்பித்தோம். மாறி மாறி எங்களை இந்த டியூனை வாசி அந்த டியூனை வாசி என்று விதவிதமாக எங்களை பாட வைத்து கொண்டு இருந்தார். கடைசியில் நாங்கள் வாசித்து காட்டிய மூன்று டியூன்களையும் ஒன்றாக சேர்த்து பாட சொன்னார். ஒரு வழியாக மூன்றையும் சேர்த்து பாடி கட்டினோம். இந்த டியூனை பைனல் பண்ணிக்கோங்க. பாடலை ரெகார்ட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு ஒகே பண்ண பாடல் தான் " பொன் அந்தி மாலை பொழுது..." பாடல். சூப்பர் ஹிட்டானது அந்த பாடல் என்றார் சங்கர் கணேஷ்.
பத்தே நிமிடத்தில் ஒகே ஆன டியூன்:
மேலும் அவர் கூறுகையில் ஒரு சில பாடல்கள் உடனே ஒகே ஆகிவிடும் ஒரு சில பாடல்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உதாரணமாக ஸ்ரீதர் சாருக்காக கம்போஸ் பண்ண ஒரு பாடல் மூன்று மாதங்கள் எடுத்து கொண்டன. அந்த பாடல் தான் "நெஞ்சம் மறப்பதில்லை..." பாடல். அடுத்து ஒரு உதாரணம் சர்வர் சுந்தரம் படத்திற்கு இன்னும் ஒரு பாடல் சேர்த்தாக வேண்டும் என்று ஏ.வி.எம் செட்டியார் கேட்டதற்காக அவசர அவசரமாக கவிஞர் வாலி அவர்கள் சிச்சுவேஷன் கேட்டு உடனே பாடல் வரிகளை பத்தே நிமிடத்தில் எழுதி கொடுக்க எம்.எஸ். விஸ்வநாதன் அதை படித்து விட்டு உடனே பாட ஆரம்பித்து விட்டார். அப்படி ஒகே ஆன பாடல் தான் "அவளுக்கென்ன அழகிய முகம்..." பாடல். இப்படி ஒரு சில பாடல்கள் நிமிடத்தில் ஒகே ஆகிவிடும். ஒரு சில சமயம் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளலாம் என்று தனது அனுபவத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தினர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். அன்றைய பாடல்களுக்கு இருக்கும் அழுத்தம் தான் அவற்றை இன்றும் நாம் காதுகளில் தென்றலை போல வருடுகிறது.