மேலும் அறிய

Santhosh Narayanan: வடசென்னையை விடுங்க... வெற்றிமாறன் ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கும் படம்... போட்டுடைத்த சந்தோஷ் நாராயணன்..!

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வடசென்னை 2 ஆம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வடசென்னை 2 ஆம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்தது. வடசென்னையில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, கிஷோர், டேனியல் பாலாஜி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வடசென்னை படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

குறிப்பாக பிளாஸ்பேக் காட்சியில் வரும் அமீர் நடித்த ராஜன் கேரக்டர் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. மேலும் படமும் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்துடன் முடிவடைந்திருக்கும். ஆனால் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 2 ஆம் பாகம் இதுவரை எடுக்கப்படவில்லை. 

ரசிகர்கள் எங்கு சென்றாலும் வடசென்னையின் 2 ஆம் பாகம் குறித்து கேட்டு வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு தனுஷ் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். வெற்றிமாறனும் அசுரன், விசாரணை முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படங்களை முடித்து விட்டார். அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் எடுக்க உள்ளார். இதை முடித்து விட்டே வட சென்னை 2 படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் வடசென்னை படம் குறித்து பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘இந்த படத்தில் இடம்பெற்ற அமீரின் ‘ராஜன்’ கேரக்டரை மையமாக வைத்து ‘ராஜன் வகையறா’ என்ற படம் ஒன்றை வைத்துள்ளார். செம படம் அது. எல்லோரும் அவருக்கிட்ட சொல்லுங்க. ராஜனின் வாழ்க்கை தான் அந்த கதையாகும். கிட்டதட்ட 2 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருக்கும். வடசென்னையை விட ராஜன் வகையறா ரொம்ப பெட்டரா இருக்கும்ன்னு நானே சொல்வேன் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் படிக்க: Vadachennai 2: "இப்போதைக்கு வடசென்னை 2-ஆம் பாகம் இல்லை” - உறுதியான தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகையில் 50% பயனாளிகள் நீக்கமா? தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகையில் 50% பயனாளிகள் நீக்கமா? தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
UP Assembly Election:
UP Assembly Election: "100 தொகுதியா..? முடியவே.. முடியாது.." காங்கிரசிடம் கறாராக பேசிய அகிலேஷ் யாதவ்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Rasi Palan Tamil Today (19-11-2026): யாருக்கு ஜாக்பாட், யாருக்கெல்லாம் சோதனை? உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Rasi Palan Tamil Today (19-11-2026): யாருக்கு ஜாக்பாட், யாருக்கெல்லாம் சோதனை? உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Embed widget