மேலும் அறிய

Vadachennai 2: "இப்போதைக்கு வடசென்னை 2-ஆம் பாகம் இல்லை” - உறுதியான தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்

வட சென்னை படத்தின் 2 ஆம் பாகம் இப்போதைக்கு இல்லை என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வட சென்னை படத்தின் 2 ஆம் பாகம் இப்போதைக்கு இல்லை என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “வடசென்னை”. பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் மூன்றாவது முறையாக நடிகர் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், பவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பையும், சர்ச்சைகளையும் சந்தித்தது. 

இந்த படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளை கடந்தும் படத்தின் ஷூட்டிங் நடக்கவேயில்லை. இதனால் வெற்றிமாறன் செல்லும் இடமெல்லாம் வடசென்னை -2 குறித்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேசமயம் 4வது முறையாக நடிகர் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி “அசுரன்” படத்தில் இணைந்தது. மிகப்பெரிய அளவில் இப்படம் வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். 

இதன் பின்னர் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்தனர். எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், கர்ணன், ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட 10 படங்களில் நடித்து முடித்து விட்டார். வெற்றிமாறனும் கடந்த 4 ஆண்டுகளாக “விடுதலை” படத்தை 2 பாகங்களாக எடுத்து வந்தார். இதற்கிடையில் சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” பட அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அடுத்ததாக வெற்றிமாறன் “வட சென்னை” படத்தை தான் கையில் எடுப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால் விடுதலை படத்தின் 2 ஆம் பாகம்,  வாடிவாசல்  படத்தை முடித்தப் பிறகு தான் வடசென்னை படத்தை கையில் எடுக்கப் போகிறேன் என ருத்ரன் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன் கூறியுள்ளார். 

இந்த திட்டம் கைவிடப்படவில்லை என்றும், கண்டிப்பாக வடசென்னை 2 படம் வெளியாகும் எனவும் வெற்றிமாறன் கூறியுள்ளார். இதேபோல் ஒளிப்பதிவாளர் வேல்ராஜூம் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை தான் எடுக்கப்போகிறார் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget