மேலும் அறிய

"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்த இளையராஜாவை ஜீயர்கள் தடுத்து நிறுத்தி கருவறைக்கு வெளியில் நிற்கச் சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய திரையுலகின் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்பவர் இளையராஜா. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் 1000த்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பா.ஜ.க.வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் உள்ளார்.

கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா:

இந்த சூழலில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இசையமைப்பாளர் இளையராஜா சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சாமி தரிசனம் செய்வதற்காக கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்துக்குள் இளையராஜா நுழைந்தார். அப்போது அவரது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை தடுத்து,  கருவறைக்குள் வெளியே நிற்குமாறு கூறினார்கள். இளையராஜா உடனடியாக அங்கிருந்து வெளியேறி அர்த்த மண்டப படியின் அருகே நின்றார். பின்னர், கோயில் நிர்வாகம் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த சம்பவத்தை அங்கே இருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

குவியும் கண்டனங்கள்:

மற்றொரு பக்கம் இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள் முறையிட்டு உள்ளனர். கடவுள்களைத் தவிர மனிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று விதி உள்ளதாகவும், இளையராஜா மற்றும் உடன் இருந்த ஜீயர்களுக்கு வெண்கொடை பிடித்து மேள தாளங்கள் முழங்க கோவில் யானை வரவேற்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆளுங்கட்சி எம்.பி.யாக இருக்கும் இளையராஜாவிற்கே இந்த நிலை என்றால், சாமானியர்களுக்கு எந்த நிலை ஏற்படும் என்றும், கோயிலின் கருவறைக்குள் ஒரு தரப்பினர் மட்டும்தான் செல்ல வேண்டுமா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இளையராஜா நடத்தப்பட்ட விதத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget