Shankar Ganesh | ‛தேவர் எங்கள பாத்து துப்பிட்டாரு...’ - இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ரீவைண்ட்!
Shankar Ganesh : பாடகர் மனோ தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் தனக்கென தனி பாதையை உருவாக்கிக் கொண்டவர்கள் இசை இரட்டையர்கள் எனச் சொல்லப்படும் சங்கர், கணேஷ். சங்கர் கணேஷ் என்ற ஒற்றைபெயரில் இருவரும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் பாடகர் மனோ தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
சங்கரும் நானும் இசையமைப்பாளர் எம் எஸ்வி வீட்டுக்கு வாய்ப்பு கேட்டு போவோம். அவர் பேசிக்கொண்டே திடீரென காணாமல் போய்விடுவார். நானும் சங்கரும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொள்வோம். நானும் சங்கரும் சந்தோஷத்தில் நண்பர்கள் ஆனவர்கள் அல்ல. மனம் நொந்தே நண்பர்கள் ஆனவர்கள். அப்படி நண்பர்கள் ஆகி வெற்றியை தேடி பிடித்தோம். சி ஆர் சுப்புராமனிடம் வேலை பார்த்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. சுப்புராமன் இறந்துவிடவே அவர் வேலை பார்த்த படத்தின் மீதப்பாடல்களை அவர்கள் போட்டு கவனம் பெற்றார்கள். நான் ஜிகே வெங்கடேஷனை விடவே இல்லை.
அவர்தான் என்னை அழைத்து வாய்ப்பு தந்தார். அவர் இசையமைத்த ஒரு படத்தின் பாட்டில் நான் உதவியாக இருந்தேன். நான் முதன் முதலாக ஸ்டூடியோவுக்குள் நுழையும்போது மிகப்பெரிய ரீரெக்கார்டிங் போய்க்கொண்டு இருந்தது, வாராயோ தோழி வாராயோ என்ற அந்த பாடலுக்கு நடுவே நான் எண்ட்ரி கொடுத்தேன். அப்படி வந்து வந்து எம் எஸ்வியிடம் இடத்தை பிடித்துவிட்டேன். நகரத்தில் திருடர்கள் என்ற படத்தில் நானும் சங்கரும் இணைந்து இசையமைத்தோம். அப்போது மகிழ்ச்சியில் நாங்கள் வானத்தில் பறந்தோம். அந்த படத்திலேயே கண்ணதாசன் எங்களை வாழ்த்தினார். கண்ணதாசனிடம் பிடித்த குணமே அவர் நமக்கும் பாட்டு எழுதுவார். யாரையாவது திட்ட வேண்டுமென்றாலும் அந்த பாட்டில் திட்டிவிடுவார். ஆனால் கதைக்கு சரியாக இருக்கும். அதுதான் கண்ணதாசன்.
ஒருநாள் மதியம் வந்து பாடெரென போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழந்தவர் யாரடா என எழுதினார். அதனைப்பார்த்த பலரும் கதைக்கு ஏற்ற வரி என புகழ்ந்தனர். அமைதியாய் கேட்டுவிட்டு அது கதைக்கு எழுதவில்லை எனக்காக எழுதினேன். இப்போதுதான் கட்சியை விட்டு என்னை தூக்கினார்கள். அதனால் எழுதினேன் என்றார்.
ஒருமுறை தேவரிடம் என்னை கண்ணதாசன் அறிமுகம் செய்தார். எனக்காக அவர் வாய்ப்பு கேட்டார். எங்களை ஏற இறங்க பார்த்த தேவர், தூ என துப்பிவிட்டார். இந்த சின்ன பசங்களா என கேட்டுவிட்டார். ஆனால் கண்ணதாசன் தொடர்ந்து வற்புறுத்தவே, ஜெயலலிதா நடித்த மகராசி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அங்கு தொடங்கியது எங்கள் வெற்றிப்பயணம். என்றார்.
கவிஞர் உதவியால் தேவர் தயாரிப்பு படங்கள் மூலம் புகழ்பெற்றதால் இவர்கள் ’’கவிஞர் வழங்கிய தேவரின் இசையமைப்பாளர்கள்’’ என அழைக்கப்படுகிறார்கள். இந்த பட்டம் நன்றிக்கானது என்கிறார் கணேஷ்.