Watch Video: ராஜா vs ராஜா ரசிகர்கள்! ”ராங்கா போகாது - எந்த ராஜா? இந்த ராஜா!” - வைரல் வீடியோ
”சந்தோஷமோ, கவலையோ, உற்சாகமோ, உத்வேகமோ, பக்தியோ, பாசமோ, காதலோ, காதல் தோல்வியோ அதற்கேற்ற ப்ளேலிஸ்ட் இருக்கிறது” என ராஜா பேசும் வீடியோ ஏற்கனவே வைரல்.
ரேடியோ, தொலைக்காட்சி, யூட்யூப் பயன்பாட்டையும் தாண்டி, மொபைல் போன் ஆப்களில் ப்ளேலிஸ்ட் அமைத்து பாடல்கள் கேட்பது வழக்கமாகிவிட்டது. எண்ணற்ற மியூசிக் ஆப்களின் அறிமுகத்தால், பிடித்த பாடல்களை ப்ளேலிஸ்ட்டில் பதிவேற்றி கேட்டு மகிழ்வது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், இந்த ப்ளேலிஸ்டுகளில், இசையமைப்பாளர் ராஜாவுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில், பிரபல மியூசிக்கல் ஆப் ஸ்பாடிஃபை ராஜாவின் எவர்க்ரீன் பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறது.
”சந்தோஷமோ, கவலையோ, உற்சாகமோ, உத்வேகமோ, பக்தியோ, பாசமோ, காதலோ, காதல் தோல்வியோ அதற்கேற்ற ப்ளேலிஸ்ட் இருக்கிறது” என ராஜா பேசும் வீடியோ ஏற்கனவே வைரல். இந்நிலையில், அவர் தனது ரசிகர்களோடு உரையாடுவது போன்ற மற்றொரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் படிக்க: பிளஸ் 1 தமிழ் பாடத்தில் இளையராஜா...! சிம்பொனித் தமிழர் என புகழாரம்!
வளர்ந்து வரும் பாடகி வானதி சுரேஷ், ஆசிரியராக பணியாற்றி வரும் ஜான் சுந்தர் என இரண்டு ராஜா ரசிகர்கள் இந்த வீடியோவில் தோன்றுகின்றனர். இவர்களுக்கு ஒரு மியூசிக்கல் போட்டி நடத்தப்பட்டது. இதில், ராஜாவின் சில மெட்டுக்கள் ஒலிக்கப்பட, அது என்ன பாடல் என அவரது ரசிகர்கள் கண்டுப்பிடிக்க வேண்டும்.
சில மெட்டுக்கள் இசைக்கப்படவே, அங்கிருந்த அவரது ரசிகர்கள் ‘டக் டக்’ என்று பாடல்களை கண்டுப்பிடித்து பாடி அசத்தினார். இதை வெகுவாக ரசித்து பார்த்து கொண்டிருந்தார் ராஜா. சில பாடல்களுக்கு பிறகு ‘ராஜா கைய வச்சா’ பாடலின் இசை ஒலித்தபோது, “ராஜா கைய வச்சா, அது ராங்கா போனாதில்ல.... எந்த ராஜா? இந்த ராஜா!” என பாடி மகிழ்ந்தனர் ராஜாவும், ராஜாவின் ரசிகர்களும்!
மேலும் படிக்க: 45 ஆண்டு கால இசைஞானி இளையராஜா பயணத்தில்: 90 கிட்ஸ் ஃபேவரைட்10 பாடல்கள்
'ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதில்லை' என்ற பாடலை இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. அவருடைய திறமைக்கு ஏற்ப இந்தப் பாடலும் வரியும் அவருக்கு எவ்வளவு பொருத்தம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதுபோன்று அமைந்தது தான் மற்றொரு பாடல் வரி, "நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா". இந்தப் பாடல் வரிக்கு ஏற்ப 45 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் திரை இசை உலகில் கால் பதித்தாலும் அவருடைய இசை காலம் கடந்து அழியாத ஒன்றாக அமைந்துள்ளது.
வீடியோவைக் காண:
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்