மேலும் அறிய

விஜயின் 10 படங்களுக்கு நோ சொன்னது ஏன்...இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்

பலமுறை விஜய் தனக்கு ஃபோன் செய்து பேசியும் அடுத்தடுத்து விஜயின் 10 படங்களுக்கு இசையமைக்க மறுத்துவிட்டதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்

ஹாரிஸ் ஜெயராஜ்

ஒருபக்கம் ஏ.ஆர் ரஹ்மான் ரசிகர்கள் மற்றும் இளையராஜா ரசிகர்கள் அடித்துக் கொண்டிருக்க எந்த வித மோதலும் இல்லாமல் சாந்தமாக இருப்பவர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்கள். கெளதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு ரஹ்மானின் ஸ்டுடியோவில் பிரோகிராம்மராக எக்கச்சக்கமான பாடல்களுக்கு பணியாற்றியுள்ளார். 2000 முதல் 2015 வரை ஹாரிஸ் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை ஆட்டி படைத்திருக்கின்றன. சமீப காலங்களில் தலைவர் ஃபார்ம் அவுட் ஆகி இருந்தாலும் மறுபடியும் கம்பேக் கொடுப்பார் என்ற ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

விஜயின் 10 படங்களுக்கு நோ சொன்னது ஏன் ?

பொதுவாக நேர்காணல்களில் பங்கேற்காத ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த வரிசையில் விஜயின் 10 படங்களுக்கு நோ சொன்னதாக அவர் தெரிவித்தது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கான காரணத்தையும் அவர் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

"விஜய் அவருடைய ஒவ்வொரு படத்திற்கு எனக்கு ஃபோன் செய்வார். நான் எடுக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வேன். என்னால் அதிகம் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அதனால் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் வேலை செய்தாலும் அதில் முழு மனதுடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.  யூத் , சச்சின் , காவலன் , வேலாயுதம் என அடுத்தடுத்து பத்து படங்களுக்கு நோ சொல்லியிருக்கிறேன். 11 ஆவது படம்தான் நண்பன். நண்பன் படம்தான் எனக்கு சரியான படமாக தோன்றியது. அதன் பிறகு துப்பாக்கி படத்தில் அவரை பாட வைத்தேன். அவர் ரொம்ப நாளாக பாடாதது மாதிரி எனக்கு ஒரு ஃபீல் இருந்தது. விஜய் கொஞ்சம் நர்வஸாக இருந்தார். அதன் பின் அவரை சென்னை மற்றும் மும்பையில் அந்த பாடலை பாட வைத்தோம்." என அவர் தெரிவித்துள்ளார்

விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. பூஜா ஹெக்டே , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் , பிரியாமணி , மமிதா பைஜூ ஆகியோ இப்படத்தில் நடித்து வருகிறார்கள் , அனிருத் இசையமைக்கிறார் , கே.வி.என் ப்ரோடக்‌ஷ்னஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
Embed widget