MS Bhaskar: ‛விஜயகாந்த் என் அம்மா மாதிரி...’ மனம் உருகி பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!
‛‛பாஸ்கர் நல்லா சாப்டிருக்கான், அதனால தூங்கட்டும், 4மணிக்கு வருவான் அப்போ, அவன வச்சு சூட்டிங் எடுத்துக்கோ அது வரை, என் வச்சு சாட் எடு’’ என்றார் விஜயகாந்த்!
எம்.எஸ். பாஸ்கர்:
நடிகரும், பின்னணி குரல் கொடுப்பவருமான எம்.எஸ். பாஸ்கர், இதுவரை 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சின்ன பாப்பா, பெரிய பாப்பா தொடர், சிவகாசி மற்றும் மொழி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார். அவர் மொழி திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருதும் பெற்றுள்ளார். காமராஜர் படத்தில் காமராஜர் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். தற்போது அவர் விஜயகாந்த் குறித்தும்,அவருடைய காதல் கதை குறித்தும் பகிர்ந்துள்ளார்
"விஜய்காந்தை அம்மானு சொல்லலாம்"
விஜயகாந்த் குறித்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர், அவரை அண்ணான்னு சொல்லலாம், அம்மான்னு சொல்லலாம். விஜய்காந்த் அண்ணா, எல்லாரையும் தாய் பாசத்தோடு பார்ப்பார். ஒரு நாள் படப்பின்போது, என்னை அருகில் உட்கார வைத்து சாப்பிட வைத்தார். அப்போது பெரிய கரண்டியில் அனைவருக்கும் மட்டன் பரிமாறப்பட்டது. அப்போது பாஸ்கர் மட்டன் நல்லா சாப்பிடுவான், இரண்டு கரண்டி வைக்க சொன்னார். அப்போது வயிறு நிறைஞ்சிருக்கு, அதன் பிறகு பெரிய கிளாசில் பாயாசம் கொடுக்க சொன்னார். அதற்கு பிறகு அண்ணா எனக்கு வயிறு நிறைஞ்சிருச்சினு சொன்னேன். உடனே டைரக்டரை கூப்பிட்டு, பாஸ்கர் நல்லா சாப்டிருக்கான், அதனால தூங்கட்டும், 4மணிக்கு வருவான் அப்போ, அவன வச்சு சூட்டிங் எடுத்துக்கோ அது வரை, என் வச்சு சாட் எடு என கூறினார். அப்படி ஒரு தங்கமான குணம் கொண்டவர் விஜயகாந்த் என எம்.எஸ் பாஸ்கர் கூறினார்.
”காதல் இயற்கையாக வரக்கூடியது”:
தனது காதலை பற்றி கூறிய எம்.எஸ். பாஸ்கர், காதல் என்பது எல்லார் வாழ்க்கையிலும் இயற்கையாக வரக்கூடிய ஒன்று, வரலை என்றால், ஒன்று பிறக்காதவராக இருக்க வேண்டும், இல்லையென்றால் இறந்தவராக இருக்க வேண்டும். நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அவங்களும் என் மீதும் இஷ்டம் என்று சொன்னார்கள், அதற்கு பிறகு ஏதோ ஒத்து வரவில்லை. இது என் மனைவிக்கும் தெரியும் , தற்போது என் மகள் மற்றும் என் மகன் ஆகிய இருவருக்கும் தெரியும்.காதலை சில பேர் வெளிப்படுத்தி இருக்கலாம். சில பேர் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். நான் வெளிப்படுத்தினேன், அதை அந்த பெண் மறுத்து விட்டார். ஆனால் எனக்கு பொக்கிசமான மனைவி கிடைத்திருக்கிறார். மேலும் கற்காலம் முதல் தற்காலம் வரை காதல் காதலாகவே இருக்கிறது என எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்