மேலும் அறிய

Modern love Chennai : மாடர்ன் லவ்: ராஜூ முருகனின் லாலாகுண்டா பொம்மைகள்.. ஒரு குட்டி ரிவ்யு

மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியின் ராஜு முருகன் இயக்கியிருக்கும் லாலாகுண்டா பொம்மைகள் பற்றி ஒரு குட்டி விமர்சனம்.

சென்னையில் நடக்கும் ஆறு  கதைகளை  இல்லை ஆறு காதல் கதைகளை கொண்டது மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி. நேற்று முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் எபிசோடான லாலாகுண்டா பொம்மைகள் இயக்குநர் ராஜு முருகனால் தழுவி, திரைக்கதை எழுதி இயக்கப்படிருக்கிறது. எப்படி இருக்கிறது லாலாகுண்டா பொம்மைகள்?

சென்னையின் லாலாகுண்டா பகுதியில் எத்தனையோ காதல் கதைகளில் இதுவும் ஒன்று. ஒருவனால் காதலித்து கருவுற்று கைவிடப்பட்டு அபார்ஷன் செய்துகொள்ளும்  ஒரு பெண்ணில் இருந்து தொடங்குகிறது கதை. ஏமாற்றப்பட்ட ஒரு பெண் எப்படி உணர்வாள். ஆண்களின் மேல் , காதலின் மேல் நம்பிக்கை இழந்து மனதில் கோபத்தை தேக்கி வைத்துக்கொண்டு இருப்பார். அப்படிதான் இருக்கிறார் ஷோபா. இனிமேல் காதலிக்கவே போவதில்லை என்று நாம் முடிவு செய்தால் போதுமா? அவ்வளவு எளிதாக காதலைக் கட்டுபடுத்திவிட முடியும் என்றால் அது எப்படி காதலாக இருக்கமுடியும் . படத்தில் சாமியாராக வரும் வாசுதேவன் சொல்வதுபோல ”லவ்வால் வந்த சோகத்த லவ்வு தான் சரிபண்ண முடியும்”

மறுபடியும் காதல்வயப் படுகிறார் ஷோபா. இந்த முறை ஒரு பானி பூரிக்காரருடன். மற்றவர்களுக்கு எல்லாம் நான்கு பானி புரி வைக்கும் கடைக்காரன் ஷோபாவிற்கு மட்டும் ஆறு பானி பூரி வைத்து தனது காதலைத் தெரிவிக்கிறார். ஒரு தமிழ்ப் பெண் வட இந்திய பையனை காதலித்தால் என்ன பிரச்சனை எல்லாம் வருமோ, அதேமாதிரி ஊர்க்காரர்கள் எல்லாம் சேர்ந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து பானி பூரிக்காரருடன் ஷோபா சேருகிறாரா என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த லாலாகுண்டா பொம்மைகளுக்கு இடையில் புதிதான ட்விஸ்ட் ஒன்றை சேர்க்கிறார் ராஜூ முருகன்.

ராஜு முருகன் எழுத்தில் நாம் சில விஷயங்களை எப்போதும் எதிர்பார்க்கலாம். மனிதர்களின் அனுபவத்தில் இருந்து வெளிப்படும் மிக உறுதியான வசனங்களை ஜோக்கர் படத்தில் பவா செல்லதுரை சொல்லும் வசணம் நினைவிருக்கிறதா? “ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல எதுவுமே கிடையாது பையா’ அதே மாதிரி இந்தக் கதையில் வைஜெயந்தி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வசுந்த்ரா பேசும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

”உடம்புல மார்க்கும் உள்ளார நோவும் இல்லாத பொம்பள எங்க இருக்கா”  மற்றும் “ஆம்பளைங்க கூட வாழ முடியாது அதே மாதிரி ஆம்பள இல்லாமலும் வாழ முடியாது” ஆகிய வசனங்கள் ராஜூ முருகன் எக்ஸ்க்லூசிவ்...

 படத்தில் நாம் பார்க்கும் லாலாகுண்டாவை ராஜு முருகனின் கண்களால் பார்ப்பது மிக எதார்த்தமான அனுபவமாக இருக்கிறது. ஷோபாவின் சித்தப்பாவாக நடித்திருக்கும் எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் டான்ஸ் மூவ்ஸை மிஸ் செய்துவிடாதீர்கள்.

சரி கடைசியாக ஒரு கேள்வி. ஒரு பானிபூரி கடைகாரனை நீங்கள் காதலித்து அவன் உங்களை ஏமாற்றிய பின் உங்களால் மறுபடியும் பானி பூரியை ரசித்து சாப்பிட முடியுமா? பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget