![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Miss India 2023 : பல இடங்கள்ல நிராகரிச்சாங்க.. வாய்ப்பை ஒதுக்க நான் முட்டாள் அல்ல... மிஸ் இந்தியா டைட்டில் வென்ற நந்தினி
மிஸ் இந்தியா 2023 பட்டம் வென்ற நந்தினி குப்தா மாடலிங் துறையில் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த நிராகரிப்புகள் பற்றியும் பாலிவுட் சினிமாவில் அவரின் என்ட்ரி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
![Miss India 2023 : பல இடங்கள்ல நிராகரிச்சாங்க.. வாய்ப்பை ஒதுக்க நான் முட்டாள் அல்ல... மிஸ் இந்தியா டைட்டில் வென்ற நந்தினி Miss India 2023 Nandini Gupta opens up about the struggles and rejections she faced at initial stage and her interest in Bollywood Miss India 2023 : பல இடங்கள்ல நிராகரிச்சாங்க.. வாய்ப்பை ஒதுக்க நான் முட்டாள் அல்ல... மிஸ் இந்தியா டைட்டில் வென்ற நந்தினி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/24/c902da5c700e7f1c1011d0f55b070d7e1682338869285224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெமினா மிஸ் இந்தியா 2023-ஆம் ஆண்டுக்கான 59-வது அழகி போட்டியின் கிராண்ட் ஃபினாலே ஏப்ரல் 15ம் தேதி இம்பாலில் உள்ள ஒரு பிரபலமான உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சுமார் 30 அழகிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். அவருக்கு வயது 19. மேலும் டெல்லியை சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சா இரண்டாவது இடத்தையும், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த தவுனோஜம் ஸ்டெரலா மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் மாடலிங் துறையில் ஆரம்ப காலகட்டத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்தும் தடைகளை எல்லாம் எப்படி வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கண்டார் என்பது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சந்தித்த நிராகரிப்புகள் :
சிறு வயது முதலே மாடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நந்தினி குப்தா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா என்ற சிறிய கிராமத்தில் இருந்து மும்பைக்கு தனது குடும்பத்தை விட்டு தனியாக சென்று பயின்று, பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஒரு கிராமத்தில் இருந்து மும்பையில் குடியேறுவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல. ஆரம்ப காலகட்டத்தில் பல சோதனைகளை சந்தித்துள்ளார். ஒரு ஃப்ரீலான்ஸராக மாடலிங் செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் பல நிராகரிப்புகளை எதிர்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் மாடலிங் தனக்கு ஏற்றது அல்ல என பல முறை மனவருத்தத்திலும் இருந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியாலும், பாசிட்டிவ் எண்ணங்களாலும் எதையும் சாதிக்க முடியும் என போராடி அனைத்தையும் எதிர்கொண்டுள்ளார்.
பாலிவுட் பிரவேசம்:
மேலும் பாலிவுட் திரையுலகில் அவரின் என்ட்ரி குறித்து கேட்ட போது நிச்சயமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். சினிமா அனுபவம் என்பது எனக்கு கிடையாது. சினிமா இண்டஸ்ட்ரி பற்றி ஒன்றுமே தெரியாமல் அது எனக்கு தேவையில்லை என ஒதுக்குவது முட்டாள்தனம். அதனால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நான் நடிப்பேன் என மிகவும் உறுதியாக தெரிவித்துள்ளார் நந்தினி குப்தா.
ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா போல நந்தினி குப்தாவையும் விரைவில் திரையுலகம் ஏற்றுக்கொள்ளும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்கவுள்ளார் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)