மேலும் அறிய

அம்மி அம்மி அம்மி மிதித்து.. திருமுருகன் முதல் மயில்சாமி மகன் வரை... சின்னத்திரை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

Serial updates : சின்னத்திரை ரசிகர்களின் அபிமான இயக்குநரான திருமுருகன், நடிகை சுஜிதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளனர்.   

அம்மி அம்மி அம்மி மிதித்து... அருந்ததி முகம் பார்த்து... ஒரு குலமகள் வீட்டுக்குள்ள கொண்டு வரும் சீதனம் மெட்டி மெட்டி மெட்டி ஒலி தான்... இந்த வரிகள் ஞாபகம் இருக்கிறதா அப்போ நீங்க கண்டிப்பா 90'ஸ் கிட்ஸ்களில் ஒருவராக தான் இருப்பீர்கள். சினிமா பாடல்களுக்கு இணையாக அனைவரையும் முணுமுணுக்க வைத்த சீரியலின் டைட்டில் பாடல் இதுவாகவே இருக்கும். 

ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் மெட்டி ஒலியை ஒலிக்க செய்த இயக்குநர் திருமுருகன் அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக மெட்டி ஒலி கோபியாகவே அனைவராலும் அடையாளப்படுத்தப்பட்டவர். மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலை  தொடர்ந்து 'நாதஸ்வரம்' சீரியலை இயக்கி நடித்திருந்தார். தனது 'திரு' புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் 'எம் மகன்', 'முனியாண்டி விளங்கியல் மூன்றாம் ஆண்டு' என இரண்டு திரைப்படங்களை கூட இயக்கியுள்ளார். 

அம்மி அம்மி அம்மி மிதித்து.. திருமுருகன் முதல் மயில்சாமி மகன் வரை... சின்னத்திரை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

அதற்கு பிறகு திருமுருகனை காணவில்லையே என தேடிய ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக 'மெட்டி ஒலி 2 ' சீரியலை இயக்க போகிறார் என தகவல்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன. ஆனால் இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது 'திரு' புரொடக்ஷன் ஹவுசில் இருந்து புதிதாக அப்டேட் ஒன்று வரவுள்ளது என தனது சோஷியல் மீடியா பக்கம் மூலம் அறிவிப்பை வெளியிட்டு சின்னத்திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் திருமுருகன்.

சுஜிதா :

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுஜிதா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் மிகவும் பிஸியாக இருக்கும் சுஜிதா, கடந்த 2018ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் துவக்கம் முதல் இறுதி வரையில் தனம் என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததும் வேகவேகமாக அடுத்த சீசனும் துவங்கியதால் அதிலும் நிச்சயம் சுஜிதா நடிப்பார் என நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

அம்மி அம்மி அம்மி மிதித்து.. திருமுருகன் முதல் மயில்சாமி மகன் வரை... சின்னத்திரை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

தற்போது சுஜிதா ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கீதாஞ்சலி' என்ற சீரியலில் நடித்து வருகிறார். சுஜிதா தமிழ் சின்னத்திரை ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக மீண்டும் ஒரு புதிய சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் 'கௌரி' என்ற சீரியலில் லீட் ரோலில் நடிக்க உள்ளார் சுஜிதா என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

யுவன் மயில்சாமி :

மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகரான மயில்சாமியின் மகன்களான அன்பு மற்றும் யுவன் என இருவருமே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாததால் அவர்களால் வெள்ளித்திரையில் பிரகாசிக்க முடியாமல் போனது. அதனால் அடுத்தபடியாக யுவன் மயில்சாமி சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார். 

அம்மி அம்மி அம்மி மிதித்து.. திருமுருகன் முதல் மயில்சாமி மகன் வரை... சின்னத்திரை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரான 'தங்கமகள்' என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக உள்ளார் யுவன் மயில்சாமி. தங்கமகள் சீரியலின் ஹீரோவாக நடித்து வரும் யுவனுக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நம்ம வீட்டு பொண்ணு' சீரியலின் ஹீரோயினாக நடித்த அஸ்வினி கமிட்டாகியுள்ளார். இந்த தொடரில் நடிகை காயத்ரி ஜெயராமும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Petrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
Rain Alert : வாட்டி வதைக்கும் வெயில்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை.. ஆரஞ்சு அலட் எச்சரிக்கை..
Rain Alert : வாட்டி வதைக்கும் வெயில்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை.. ஆரஞ்சு அலட் எச்சரிக்கை..
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
Embed widget