பரியேறு பெருமாள் இந்தி ரீமேக் 'தடக் 2' எப்படி இருக்கு...கிரிஞ்சா..காவியமா..விமர்சனம் இதோ
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறு பெருமாள் திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள தடக் 2 படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

தடக் 2
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறு பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் தடக் 2 திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சித்தாந்த் சதுர்வேதி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில் , திருப்தி டிம்ரி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கரண் ஜோகரின் தர்மா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து ஷாஜியா இக்பால் இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் மராத்தியில் வெளியான சாய்ராத் திரைப்படத்தை இந்தியில் தடக் கரண் ஜோகர் தயாரித்திருந்தார். சாய்ராத் படம் பேசிய மைய அரசியலை நீக்கிவிட்டு சாதாரான ரொமாண்டிக் காமெடி படமாக இந்த படத்தை இந்தியில் தடக் 2 ரீமேக் செய்திருந்தார்கள். தற்போது பரியேறு பெருமாள் ரீமேக் குறித்து படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்
தடக் 2 விமர்சனம்
தடக் முதல் பாகத்தில் செய்த தவறை இந்த முறை தடக் 2 படத்தில் சரி செய்திருக்கிறார்கள். பரியேறும் பெருமாள் படத்தின் மையக் கதையில் பெரியளவில் மாற்றங்கள் செய்யாமல் சில சில மாற்றங்கள் மட்டுமே தடக் 2 படத்தில் செய்யப்பட்டுள்ளன. முடிந் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திருப்தி டிம்ரி இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளதார்கள். அழுத்தமான உணர்வுகள் உள்ள கதை என்பதால் படம் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகிறது. ஆனால் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த கதைக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதே ஒரே குறை.
#Dhadak2Review 🎬
— Sagar Talkies (@SagarTalkies) August 1, 2025
⭐️⭐️⭐
A compelling blend of realism and emotion, Dhadak 2 stands out for its grounded storytelling and raw intensity.
Siddhant Chaturvedi delivers a breakout performance, while Triptii Dimri lends quiet depth to her role.
Despite a slightly underwhelming… pic.twitter.com/lX31BZB5gF
#Dhadak2Review: A HARD-HITTING LOVE SAGA. 🤯
— Suryakant Dholakhandi (@maadalaadlahere) August 1, 2025
Rating: 3.5*/5 ⭐⭐⭐💫 #Dhadak2 has the elements where you'll laugh and fall in love but with some unexpected turns and twist which go against the pair #SiddhantChaturdevi and #TriptiiDimri in the film. Surely an eye-opener. ❤️💥 pic.twitter.com/7s8wheEiQM





















