Bison First Look: மாரி செல்வராஜ் - த்ருவ் விக்ரம் கூட்டணி.. “பைசன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
போஸ்டரை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ் அதில், “கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்” என பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்த மாரி செல்வராஜ், அடுத்ததாக த்ருவ் விக்ரமுடன் இணைந்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்துக்கு “பைசன்” என பெயரிடப்பட்டுள்ளது.
கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…💥✨#Bison @beemji @NeelamStudios_ @ApplauseSocial @nairsameer @deepaksegal @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi @rajisha_vijayan @KalaiActor @editorsakthi @Kumar_Gangappan… pic.twitter.com/0bpLJFoEsB
— Mari Selvaraj (@mari_selvaraj) May 6, 2024
பைசன் என்றால் காட்டெருமை என்பது பொருள். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ் அதில், “கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்” என பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை நெல்லையில் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கபடி விளையாட்டை மையப்படுத்திய இப்படம் நீண்ட நாட்களாக எடுக்க திட்டமிட்டப்பட்டு வந்தது. ஆனால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் அமைச்சராக பதவியேற்றதால் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தார். அவர் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் விருப்பப்பட்டதால் த்ருவ் விக்ரம் படம் தள்ளிப்போடப்பட்டது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை படத்தை மாரி செல்வராஜ் இயக்கிய நிலையில் தற்போது காளன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.