Bison OTT Release: பைசன் படத்தின் ஓடிடி தேதி, நேரம் அறிவிப்பு.. எப்போ தெரியுமா?
பைசன் காளமாடன் படத்தின் பாடல்களை மாரி செல்வராஜ் எழுதியிருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பைசன் படம் பிரபல கபாடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்கள் மனதை வென்ற பைசன்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம் “பைசன்”. இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்த இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி, அழகம் பெருமாள், அருவி மதன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பைசன் காளமாடன் என பெயரிடப்பட்ட இப்படத்தின் அனைத்து பாடல்களையும் மாரி செல்வராஜ் எழுதியிருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பைசன் படம் பிரபல கபாடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சாதிய இயக்குநர் என முத்திரை குத்திரைப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தன் மீதான விமர்சனத்தை இப்படத்தின் மூலமாக தகர்த்தெறிந்தார் என படம் பார்த்த பலரும் பாராட்டினர். குறிப்பாக தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய விஷயங்களை கவனமுடன் கையாண்டிருந்தார்.
நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
Watch Bison on Netflix, out 21 November in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam #BisonOnNetflix @applausesocial @NeelamStudios_ #SameerNair @deepaksegal @mari_selvaraj @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi #AmeerSultan @rajisha_vijayan…
— Netflix India South (@Netflix_INSouth) November 17, 2025
இந்த நிலையில் பைசன் படம் தியேட்டரில் தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. குறிப்பாக நீண்ட நாட்களாக தன்னுடைய நடிப்புக்கேற்ற படத்தை தேடி வந்த துருவ் விக்ரமுக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது. மேலும் ராஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் இப்படத்தில் நடித்ததற்காக பெருமை கொள்வதாக தெரிவித்தனர். இப்படம் தியேட்டரில் மட்டும் ரூ.75 கோடி வசூலை ஈட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஓடிடியில் வெளியாகும் படம்
இந்த நிலையில் பைசன் படம் தீபாவளிக்கு வெளியான நிலையில் உடன் வெளியான ட்யூட் படம் நவம்பர் 14ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. பைசன் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்று நள்ளிரவு 12 மணி முதல் இப்படத்தை காண முடியும். தியேட்டரில் பார்த்து மிகப்பெரிய அளவில் விமர்சனம் மற்றும் பாராட்டைப் பெற்ற பைசன் படம் நிச்சயம் ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.





















