'சிறுமிக்காக கார்ப்பரேட் சாமியாருடன் மோதும் வழக்கறிஞர்..' மனோஜ் பாஜ்பாய் நடிக்கும் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ்..!
ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர், மைனர் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, நாட்டின் மிகப்பெரிய அந்தஸ்து கொண்ட மனிதனுக்கு எதிராக ஒரு அசாதாரண வழக்கில் தனியாகப் போராடுகிறார்,
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான 'சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை' (Sirf Ek Bandaa Kaafi Hai) படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
வினோத் பானுஷாலி, Zee Studios மற்றும் சுபர்ன் S வர்மாவின் அதிரடியான கோர்ட் டிராமா மே 23 அன்று ZEE5 இல் திரையிடப்படவுள்ளது.
வழக்கறிஞரின் போராட்டம்:
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் திரைப்படமான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ இன் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’, படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி.சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு சாதாரண மனிதனின் கதை - ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர், நாட்டில் மிகப்பெரிய அந்தஸ்து கொண்ட மனிதனுக்கு எதிராக ஒரு அசாதாரண வழக்கில் தனியாகப் போராடுகிறார், மைனர் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் மீது வழக்குத் தொடுத்து அதை அவர் எப்படி வெற்றிகரமாக முடித்தார் என்பதே கதை.
பாலியல் வன்கொடுமை:
வினோத் பானுஷாலி ஸ்டுடியோ லிம்ட்டட், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சுபர்ன் S வர்மா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அட்டகாசமான கோர்ட் டிராமாவான 'சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை' 23 மே 2023 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது. பத்மஸ்ரீ விருது மற்றும் தேசிய விருது பெற்றவரான மனோஜ் பாஜ்பாய், ’சைலன்ஸ் கேன் யூ ஹியர் இட்?’ , ’டயல் 100’ படங்களுக்குப் பிறகு ZEE5 தளத்தின் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
ட்ரெய்லரில், P.C சோலங்கி (மனோஜ் பாஜ்பாய்) அவரது வாழ்க்கையின் மிகப் பெரிய வழக்கில் போராடுகிறார். அதுவும் ஒரு மைனர் பெண்ணின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நாட்டில் சக்தி வாய்ந்த மனிதனுக்கு எதிராக போராடுகிறார்.
அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய சாட்சிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் இருந்தபோதிலும், P.C சோலங்கி உண்மைக்கான தனது போராட்டத்தில் விடாப்பிடியாக இருக்கிறார். ஒரு சாதாரண மனிதனின் மன உறுதிக்கும் மிகப்பெரிய ஆளுமை சக்தி கொண்ட மனிதனுக்கு இடையேயான இந்தப் போர் 5 ஆண்டுகள் நீடித்தது. P.C சோலங்கி நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் பலருக்கு எதிராக போராடி, எந்த கடவுளும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை நிரூபிக்கிறார்.
இந்தப் படம் குறித்து மனோஜ் பாஜ்பாய் முன்னதாக பேசியதாவது: “சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தில் P.C சோலங்கியின் பாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஏனென்றால் இது உண்மை மற்றும் நீதிக்காக அனைத்து முரண்பாடுகளையும் கடந்து, ஒரு அசாதாரண வழக்கில் வாதாடிய ஒரு சாதாரண மனிதனின் எழுச்சியூட்டும் கதை. படத்தின் டிரெய்லர் கண்டிப்பாக பார்வையாளர்களை ஈர்க்கும், இந்த அற்புதமான கதையை காணும் ஆவலை தூண்டும். P.C சோலங்கி தான் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே நான் நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.
இயக்குநர் அபூர்வ் சிங் கார்க்கி இந்தப் படம் பற்றி கூறுகையில்.., “சர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை” இயக்குநராக என் முதல் அறிமுக திரைப்படம், என்றென்றும் என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். இப்படத்தில் முன்னணி நடிகரான மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து பணியாற்றியது மிக மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்திற்கு இவரை விட ஒரு சிறந்த நடிகரை என்னால் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.
மனோஜ் சாரின் மிகச்சிறந்த நடிப்பில் இப்படமும் ஒன்று என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும், மேலும் படத்தின் இறுதிப் பகுதி மக்கள் மனதில் நீண்ட காலமாக நினைவில் இருக்கும். படத்திற்குப் பார்வையாளர்கள் தரப்போகும் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படம் வரும் மே 23ஆம் தேதி முதல் ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும்.