Manju warrier: கூட்டத்தில் சிக்கிய மஞ்சு வாரியர்... வைக்க கூடாத இடத்தில் கை வைத்த ரசிகர்.. அதிர்ச்சி வீடியோ
பெங்களூரில் ஒரு மால் திறப்பு விழாவிற்குச் சென்றாள். விழாவிற்குப் பிறகு, அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறும்போது, அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் அந்த இடத்தில் கூடினர்.

அசுரன், துணிவு வேட்டையன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமீபத்தில் கேரளாவில் ஒரு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து வெளியேறும்போது ரசிகர் ஒருவர் அவரின் இடுப்பை சீண்டிய வீடியோ ஒன்று இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் லூசிஃபர் 2 படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்ற மஞ்சு வாரியருக்கு, அதன் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர் சமூக ஊடகங்களில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். இதன் விளைவாக, பல ஷாப்பிங் மால்களைத் திறப்பதற்கான சலுகைகளைப் பெறுகிறார். இந்த சூழலில், சமீபத்தில் பெங்களூரில் ஒரு மால் திறப்பு விழாவிற்குச் சென்றாள். விழாவிற்குப் பிறகு, அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறும்போது, அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் அந்த இடத்தில் கூடினர்.
SHOCKING from crowd🚫 pic.twitter.com/nNGVFe8hwR
— Manobala Vijayabalan (@ManobalaV) May 2, 2025
அப்போது மஞ்சு வாரியர் தன் வாகனத்திற்குத் திரும்பிச் செல்லும்போது, பொதுமக்களை நோக்கி கையசைத்த படியும் ரசிகர்களிடாம் செல்ஃபியும் எடுத்துக்கொண்டிருந்தார்.. அந்த நேரத்தில், கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்பு பகுதியில் தொட முயன்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இது நியாயமற்றது என்றும், தன்னை துன்புறுத்த முயன்ற நபர் மீது மஞ்சு வாரியர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் நடிகைகளுக்கு எதிரான இதுபோன்ற துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், கடுமையான நடவடிக்கை மூலம் தடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் கவலை தெரிவித்தனர்.
ஆனால் அந்த ரசிகர் மஞ்சு வாரியாரை கூப்பிட தான் கையை நீட்டினார் அப்பொது தான் மஞ்சு வாரியரி இடுப்பில் கை பட்டதாகவும் சொல்லப்படுகிறது, ஒரு வேளை ரசிகர் தொட்டது தவறாக இருந்திருந்தால் மஞ்சு வாரியார் நிச்சயம் அவரை அறைந்திருப்பார் ஆனால் அவர் தவறான எண்ணத்தில் தொடவில்லை என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொது இடத்தில் இப்படி ஒரு நடிகையை கூப்பிடுவது தவறு.






















