Manisha Koirala: கைவிட்ட குடும்பத்தினர், நண்பர்கள்.. கண்கலங்கிய மனிஷா கொய்ராலா.. என்ன நடந்தது?
தமிழில் 1995 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் பம்பாய் படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து இந்தியன், பாபா, முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், மாப்பிள்ளை ஆகிய சில படங்கள் மட்டுமே நடித்தார்.
பிரபல நடிகை மனிஷா கொய்ராலா புற்றுநோய் பாதிப்பு காலக்கட்டத்தில் தனக்கு நேர்ந்த பாதிப்புகளை நேர்காணல் ஒன்றில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் முன்னாள் பிரதமரான பிஷ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி தான் மனிஷா கொய்ராலா. மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த அவர் 1989 ஆம் ஆண்டு பெரி பெடவுலா என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் 1995 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் பம்பாய் படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து இந்தியன், பாபா, முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், மாப்பிள்ளை ஆகிய சில படங்கள் மட்டுமே நடித்தார். ஆனாலும் மனிஷா கொய்ராலா இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இப்படியான நிலையில் அவர் 2013 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். மிகவும் கஷ்டப்பட்டு நோய் பாதிப்பில் இருந்து மீண்ட மனிஷா கொய்ராலா ஒரு நேர்காணலில் அந்த கடினமான காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
அதாவது எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிந்தவுடன் என்னுடன் பார்ட்டி செய்யும் நண்பர்கள், கடைசி வரை இருப்பார்கள் என நினைத்த நான் நண்பர்கள் விலகினார்கள். மேலும் பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தபோதும் கூட நான் புற்றுநோயால் அவதிப்பட்ட காலத்தில் எனது குடும்பத்தினர் கூட கைவிட்டனர். அதுதான் நம்பிக்கையை இழந்த எனக்கு சிகிச்சையை தொடர வழி கொடுத்தது.
வாழ்க்கை பயணத்தில் இது ஒரு அனுபவமாக இருந்தது. உண்மையில் எனக்கென உண்மையான நண்பர்கள் இருப்பதாகவே நான் நினைத்திருந்தேன். எனது அம்மா, சகோதரன், அவரின் மனைவி மட்டுமே இந்த காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தார்கள். எதுவாக இருந்தாலும் நமது குடும்பம் மட்டுமே வாழ்க்கையில் முதலில் வருகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அதற்கு பின்னால் தான்” என மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
மேலும், “வாழ்க்கையில் நான் நன்றியுள்ளவளாக இருக்க வேண்டியுள்ளது. புற்றுநோய்க்கு பிறகு வாழ்க்கையில் இரண்டாம் வாய்ப்பு கிடைத்தபோது நேரத்தின் மதிப்பை நான் புரிந்துக்கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. நீங்கள் வயதாகும்போது தான் யதார்தத்தை ஏற்றுக்கொள்வீர்கள். எனக்கென பல கனவுகள் இருந்தது. அதில் தாய்மை அடைவதுமாக இருந்தது.
தாய்மையடைய முடியாத நிலையில் தத்தெடுப்பு பற்றியும் நிறைய யோசித்தேன். ஆனால் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன், பதட்டப்படுகிறேன் என்பதால் பல விவாதங்களுக்கு பிறகு அதனை கைவிட்டேன். நான் கடவுளின் குழந்தையாக இருக்க நினைத்தேன். என்னிடம் இப்போது இருப்பது வயதான பெற்றோர்கள் தான். அதனால் அடிக்கடி காத்மண்டு சென்று அவர்களுடன் நேரம் செலவிடுகிறேன்.