கல்யாண வீடுகளில் கலக்கப்போகும் 'ஜிங்குச்சா'...தக் லைஃப் முதல் பாடல் லிரிக்ஸ் இதோ
Thug Life First Single Lyrics : மணிரத்னம் இயக்கத்தில் கமல் , த்ரிஷா , சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் வரிகள் இதோ

தக் லைஃப்
நாயகன் படத்தைத் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைஃப் . சிம்பு , த்ரிஷா , ஐஸ்வர்யா லக்ஷ்மி , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்லார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்று தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது
'ஜிங்குச்சா' பாடல் வரிகள்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா....
எங்க சுந்தரவல்லிய இன்னும் சுந்தரமாக்குங்க
இந்த சக்கரகட்டிய சேர்த்து பொங்கலாக்குங்க
எங்க கங்க கொடுத்தோம்
உங்க அடுப்பில் சேர்த்துக்க
உலையில அரும்பொருளின்பம்
மூனையும் சேர்த்து மூட்டுங்க
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
பந்துக்கு ஈசான மூல
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
பக்கமா பள்ளம் பறிச்சாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
குங்குமமும் மஞ்சலும் சேர்த்தாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
மங்கலமோ மங்கலம் உண்டாச்சு
அப்பனின் கண்மனியாம்
அற்புத பாவை இவள்
நடத்தின சுயம்வரத்தில்
தேர்ந்தவன் என் மகந்தாங்க
தூரத்து சொர்க்கத்தில
நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நட்பிலேயே
பிடிச்சேன் ஏன் கிருகலட்சுமி
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா பெருசுங்க சம்மதிச்சு
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா சம்மதம் செய்யாட்டு
ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா பிரசவம் முடிஞ்சதும் தான்
ஓ....
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
பந்துக்கு ஈசான மூல
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
பக்கமா பள்ளம் பறிச்சாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
குங்குமமும் மஞ்சலும் சேர்த்தாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
மங்கலமோ மங்கலம் உண்டாச்சு
ஒருமையிலே பேரசொல்லி அடிச்சு வைதவ
பந்தலிலே பணிவுகாட்டி வேஷம் போடுறா
பல நாளாய் கனவில் மட்டும் பார்த்த காட்சிய
முதலிரவில் தணிக்கையின்றி பார்க்க போகிறா
அடியே....
சிங்காரமாய் சிரிப்பை அடக்கும் கள்ளி
என் குளத்தில் மட்டும் மலரும் இந்த அல்லி
சிறு குண்டுமல்லிப் போல்
பல புள்ள குட்டிய
இவ பெத்துப்போட போவதெல்லாம் இங்கதான்
சிக்கிட்டான் சிக்கிட்டான் சிக்காத காளை
சமையலுக்கு உதவ ஆளு கிடைச்சுட்டான்
சம்சாரம் சொன்னதே வேதமாக ஓதுவான்
பொண்டாட்டிதாசனாக மாறுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
வீட்டுக்குள்ள சொம்பு தூக்குவான் (2)
ஜிங்குச்சா ஜிங்குச் சா
அருந்ததி பார்த்தாச்சா...
ஜிங்குச்சா ஜிங்குச் சா
அம்மி மிதிச்சாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச் சா
மெட்டிய போட்டாச்சா...
ஜிங்குச்சா ஜிங்குச் சா
ஏழடி வச்சாச்சா
வந்தவேல முடிஞ்சதுங்க
பந்திக்கு முந்துங்க
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா....





















