எம்புரான் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள சினிமா ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள படம் எம்புரான். 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் இது.
சர்வதேச கடத்தல் மாஃபியா குரேஷி ஏப்ரகாம் (மோகன்லால்). அவர் சொந்த ஊர் கேரளாவில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடி ஏற்படுகையில், அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதே எம்புரான் படத்தின் கதையாம்.
எம்புரான் படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்றால் அதன் தொழில்நுட்ப தேர்ச்சிதான். ஸ்டன்ட் காட்சிகளாகட்டும் , படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட லொக்கேஷன் , காஸ்டியூம் துப்பாக்கி , ப்ரோடக்ஷன்ஸ் , வி.எஃப்.எக்ஸ் என உலகத் தரமான ஒரு காட்சி அமைப்பை சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
கதை ரீதியாக இன்னும் எங்கேஜ் செய்திருந்தால் மலையாள சினிமாவில் எம்புரான் திரைப்படம் ஒரு பெரிய மைல் கல்லாக இருந்திருக்கும்
எம்புரான் வசூல் ரீதியிலாக நல்ல வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை கதை எப்படியிருந்தாலும், மோகன்லான் ரசிகர்கள் கொண்டாடினர்.
எம்புரான் திரைப்படம் முதல்நாளில் மட்டும் சுமார் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ரூ.236 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
எம்புரான் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 24, 2025 ல் வெளியாகிறது.