மேலும் அறிய
Advertisement
Mangalavaaram OTT Release: ”தகாத உறவு வைத்தால் மரணம் தான்” - மங்களவாரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா?
Mangalavaaram OTT Release: ”மகாலஷ்மிபுரம் என்ற ஊரில் ஒவ்வொரு ஊரிலும் செவ்வாய்கிழமை தோறும் ஆண், பெண் இறக்கின்றனர்.
Mangalavaaram OTT Release: திருமணத்தை தாண்டி உறவு வைத்தால் உயிர் பலி கேட்கும் படமாக உருவாகி இருக்கும் மங்களவாரம் படம் நாளை ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
இயக்குநர் அஜய் பூபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மங்களவாரம். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். படத்தில் அஞ்சாதே படத்தில் நடித்த அஜ்மல், அட்டக்கத்தி நந்திதா ஸ்வேதா, பயல் ராஜ்புத், ரவீந்திரா விஜய், ரௌத்திரம் படத்தில் நடித்த சைதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதேபோல் ஆர்டிஎக்ஸ் 100 படத்தில் நடித்த பிரபலமான ராஜ்புத் இந்த படத்தின் கதை உணர்ந்து சரியாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
இந்தியில் மங்களவாரம் என எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தமிழில் செவ்வாய்க்கிழமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்ற மங்களவாரம் படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. திகிலூட்டும் ஹாரர் படமாக எடுக்கப்பட்டுள்ள மங்களவாரம் படம் நாளை (25-12-2023) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. படத்தை தியேட்டரில் சென்று ரசிக்க தவறியவர்கள், ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம்.
மகாலஷ்மிபுரம் என்ற ஊரில் ஒவ்வொரு ஊரிலும் செவ்வாய்கிழமை தோறும் ஆண், பெண் இறக்கின்றனர். இருவரது மரணம் இருக்கும் இடங்களில், அவர்கள் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அடுத்த வாரத்தில் மற்றொரு ஜோடியின் உயிரிழந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விநோதமாக, அமானுஷ்யமாகவும் நடைபெறும் இந்த மரணங்கள் குறித்து விசாரிக்க பெண் போலீஸ் அதிகாரியாக வருபவர் தான் நந்திதா ஸ்வேதா. அதேநேரம் கொலையை விசாரிக்கும் நந்திதாவுக்கு ஜமீன்தாரின் குடும்பம் இடையூறு ஏற்படுகிறது. அதையெல்லாம் எப்படி எதிர்கொண்டு மர்ம மரணங்களின் காரணத்தை நந்திதா கண்டுப்பிடிப்பாரா என்பதே படத்தின் கதையாக உளது.
மேலும் படிக்க: Salaar Making Video: 3 ஆண்டுகளின் கடின உழைப்பு... சலார் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion