மேலும் அறிய

Madhuri Dixit Mother Death: பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாயார் மறைவு - ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி

இது குறித்து தன் சமூகவலைதளப் பக்கத்திலும் தன் அன்னையின் புகைப்படத்துடன் பதிவிட்டு வேதனை தெரிவித்துள்ளார் மாதுரி.

பிரபல நடிகை மாதுரி தீட்சித்தின் தாய் ஸ்னேகலதா தீட்ஷித் உயிரிழந்துள்ளது பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயை இழந்து வாடும் மாதுரி

பாலிவுட் சினிமாவில் 1988ஆம் ஆண்டு அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர் நடிகை மாதுரி தீட்சித். இவரது அம்மா ஸ்னேகலதா தீட்சித் இன்று தன் 90ஆவது வயதில் உயிரிழந்ததாக மாதுரி வருத்தத்துடன் அறிவித்துள்ளார்.

இது குறித்து மாதுரி தீட்சித் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனே வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் அன்புக்குரிய ஆயி (Aai)  சிநேகலதா தீட்சித், இன்று காலை அவரது அன்புக்குரியவர்கள் சூழ்ந்திருந்த தருணத்தில் அமைதியாக இயற்கை எய்தினார்" எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தன் சமூகவலைதளப் பக்கத்திலும் தன் அன்னையின் புகைப்படத்துடன் பதிவிட்டு மாதுரி வேதனைத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள், திரையுலகினர் ஆறுதல் 

வயது மூப்பு காரணமாக மாதுரியின் தாய் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மாதுரியின் ரசிகர்களும் திரைத்துறையினரும் அவருக்கு தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக சென்ற ஆண்டு தன் அன்னையின் பிறந்தநாளுக்கு மாதுரி வெளியிட்ட உணர்வுப்பூர்வமான பதிவு இணையத்தை ஆக்கிரமித்தது. அதேபோல் அன்னையர் தினத்தன்றும் தன் அன்னை ஸ்நேகலதா தீக்‌ஷித் மற்றும் தன் சகோதரிகள் என குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை மாதுரி பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தாயை இழந்து வாடும் மாதுரி தீட்சித்துக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

நடிப்பு ,நடனத்தால் கட்டிப்போட்டவர்

தன் நடிப்பு மற்றும் நடனத்தால் பாலிவுட்டை கட்டிப்போட்ட நடிகை மாதுரி தீட்சித்துக்கு தற்போது 55 வயதாகிறது.

தேசாப் படத்தில் அனில்கபூருக்கு ஜோடியாக 1988ஆம் ஆண்டு அறிமுகமான மாதுரி,  ‘ஏக் தோ தீன்...’ என்ற ஒற்றைப் பாடலில் நாட்டின் இண்டு இடுக்களிலெல்லாம் பிரபலமானார். தொடர்ந்து தன் நடிப்பு மற்றும் நடனத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்து இன்று வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

வெள்ளித்திரை தொடங்கி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள் வரை தொடர்ந்து ஆக்டிவ்வாக வலம் வரும் மாதுரி இறுதியாக நடித்த மஜா மா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது . சென்ற ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Oscars 2023: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கிறதா? எந்தெந்த பிரிவில் என்னென்ன படங்கள் வெல்லும்? - கணிப்புகள் சொல்வது இதுதான்...!

Rajinikanth: “எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர் இவர்தான்” உண்மையை உடைத்துப் பேசிய ரஜினிகாந்த்..!

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget