பொங்கல் விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன், அதிதி... களைகட்டிய மாவீரன் படப்பிடிப்பு தளம்!
மிஷ்கின், நடிகை சரிதா, டோலிவுட் நடிகர் சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பரத் சங்கர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தீபாவளி ரிலீஸாக வெளியான திரைப்படம் 'பிரின்ஸ்'. எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும் இவர்களோடு இயக்குனர் மிஷ்கின், நடிகை சரிதா, டோலிவுட் நடிகர் சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பரத் சங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவீரன் படக்குழுவினர் முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
View this post on Instagram
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மடோன் அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்தப் புகைப்படங்களின் நெட்டிசன்களின் லைக்ஸை அள்ளி வருகின்றன.

இதேபோல் சிவகார்த்திகேயன் இன்று காலை பகிர்ந்த பொங்கல் ஸ்பெஷல் குடும்பப் படம் இணையத்தில் ட்ரெண்டானது.
View this post on Instagram
பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கையுடன் தன் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் தாஸ் என குடும்பத்துடன் க்யூட்டான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் இந்த ஃபோட்டோவும் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.





















